எழுத்திலிருக்கும் உகர ஒலி, முன்வந்த மெய்யினால்
இயல்பாகக் குறைவதைக் கொண்டும், நெட்டெழுத்து முன்வந்தால்
நாடு என்னும் சொல்லில் உள்ள ‘டு’ என்னும் எழுத்திலிருக்கும்
உகர ஒலி இயல்பாகக் குறைவதைக் கொண்டும் குற்றியலுகரம்
என்றார்கள். இரண்டு சொற்களையும் உச்சரித்துப் பார்த்தால்
உண்மை புலனாகும். மொழி உண்டாதற்குக் காரணமான
ஒலி அணுக்களால் உண்டாவது எழுத்து என்றார்
நன்னூல் ஆசிரியர்.ஒலியணுக்களால் ஆவது ஒலி எழுத்து
என்று நன்னூல் ஆசிரியர் கூறுவது மிகுந்த விஞ்ஞான
முறையில் அமைந்திருக்கிறது. இதனால் தமிழிலக்கண அறிஞர்கள்
ஒரு வகையில் அறிவியல் அறிஞராய் (‘Tamil Grammarians are
scientific`) இருந்தார்கள்
என்று உணர்கிறோம்.
Books is on the table, You is coming
என்று ஒருவர்
ஆங்கில இலக்கண அறிவின்றிக் கூறிவிட்டால், ஓரளவு
ஆங்கில அறிவுடையவர்களும் விழுந்து விழுந்து சிரித்து,
"ஏன் ஐயா இவ்வாறு ஆங்கிலத்தைக் கொலை புரியாமல்
தமிழிலேயே பேசலாகாதா?" என்று சொல்லி, அவரை
எள்ளி
நகையாடுகிறார்கள். அவர்களே, இன்று செய்திகள் வராது
என்றும் இரண்டு மோட்டார் வண்டிகள் ரயிலுடன் மோதிற்று
என்றும் இலக்கண அறிவு சிறிதுமின்றி எழுதுகிறார்கள்.
இப்படி
எழுதுவதைக் கண்டு வழுவென்று ஒருவரும் சிரிப்பதில்லை.
ஆயிரக்கணக்கான நிருபர்கள் நாளிதழ்களில் இவ்வாறு
பிழையாக எழுதுவதைக் கண்டு குறை கூறுகிறார்களா?
இல்லையே. செய்திகள் வாரா என்று மோட்டார்
வண்டிகள்
ரயிலுடன் மோதின என்று எழுதுவதுதான் சரியாகும்.
என் தம்பி சட்டையும்
என் சட்டையும் நனைந்தது
என்று எழுதுவது கூடாது; நனைந்தன என்று எழுதுதல்
வேண்டும். ஏன்? நனைந்தன என்பது பன்மை வினைமுற்று.
ஒருவர் மக்கள்கள் என்கிறார். மக்கள் என்பதே
பன்மை.
மக்கள்கள் என்பது பெருந்தவறு.
|