|
ஒரு மாணவர் குழந்தையைப் பால் கொடுத்து
நன்றாகப் பாதுகாத்துக் கொல்ல வேண்டும் என்று
எழுதினார். பாதுகாத்துக் கொள்ள என்றன்றோ எழுத
வேண்டும்?
பலர் உந்தன், எந்தன் என்று உரைநடையிலும்
பாட்டிலும் எழுதுகிறார்கள். உன்றன் (உன் + தன்) என்றும்,
என்றன் (என் + தன்) என்றும் எழுத வேண்டும். பன்மையாக
எழுதவேண்டுமென்றால் உந்தம், எந்தம் என்று எழுதுக.
நாயோ அல்லது நரியோ இங்கு வந்தது என்று
எழுதுகின்றனர் பலர். ஐய ஓகாரம் வரும்போது "அல்லது"
என்னுஞ் சொல் வேண்டுவதில்லை. நாயோ நரியோ
வந்தது
என்றுதான் எழுதவேண்டும்.
மூன்று ரூபாயாவது அல்லது நான்கு ரூபாயாவது கொடு
என்று எழுதுவது தவறு. மூன்று ரூபாயாவது நான்கு ரூபாயாவது
கொடு என்றே எழுதவேண்டும். இது எல்லாம் என்பது தவறு.
இவை எல்லாம் என்க.
அக்கப்போர் என்பது உருதுச் சொல். அக்பார் என்னும்
சொல் அக்கப்போர் என்று திரிந்து வருகிறது. அதற்கோசரம்
என்பதில் கோசரம் என்பது கன்னடச் சொல். அக்கறை
என்பது அக்கறே என்னும் கன்னடச் சொல்லின் வடிவம்.
அதற்குக் கவனம் என்பது பொருள். அக்கறை என்று
தமிழில்
எழுதுவதே நல்லது. அக்கரை என்று எழுதினால் பொருள்
வேறுபடும். தெலுங்கிலும் இச்சொல் வல்லின றகரம்
இட்டு
எழுதப்படுகிறதாம். "சிங்கரேணி என்ற இடத்தில் நிலக்கரி
கிடைக்கிறது" என்னும் வாக்கியத்தில் என்ற என்று எழுதாமல்
என்னும் என்று எழுத வேண்டும். என்ற எனில் அஃது
இறந்த காலமாகும்.
நடை முறை இலக்கணம் கற்க
சிறந்த தமிழ்க் கல்விக்குத் தமிழிலக்கணம் ஓரளவு
பயன்படும் வகையில் நடைமுறையில் கற்க வேண்டுவது
இன்றியமையாதது என்று இதுகாறும் கூறியவற்றால் நன்கு
புலனாகும். எழுதுவது நன்கு
|