|
பட்டணத்துக் கோட்டையில் கட்டப்பட்டிருந்த கொடிகள்
அருச்சுனைன, ‘வருக, வருக’ என்று அழைப்பது போல ஆடிக்
கொண்டிருந்தன.
துரியோதனைப் பார்த்துக் கொடிகள், ‘‘நீ வரினும்
எழில்வண்ணன் படைத்துணையாக மாட்டான். திரும்பிப்போ”
என்று கூறுவது போல ஆடிக் கொண்டிருந்தன,
சேவல்கள், ‘‘மாணவர்களே! காலை வந்து விட்டது;
எழுந்திருங்கள், எழுந்திருங்கள்” என்று கூப்பிடுவது போலக் கூவின.
தற்குறிப்பேற்ற அணி அழகானது. நம் மனப்போக்குக்கு
ஏற்றவாறு இவ்வணியைப் பயன்படுத்தலாம்.
உயர்வு நவிற்சி அணி
(Hyperbole or Exaggeration)
ஒரு பொருளை நம்ப முடியாதவாறு மிகைப்படுத்திக் கூறுவது
உயர்வு நவிற்சி அணியாகும்.
1. மேகங்கள் தங்கி உறங்கும்படியான கோட்டை மதிலில்
உராய்ந்து சூரியனும் உடல் சிவந்து விட்டது.
2. கோட்டை அகழியின் ஆழம் பூமியைத் தாங்கி நிற்கும்
ஆதிசேடன் தலை வரையில் சென்றது.
பிறிது மொழிதல் அணி
உவமானத்தைத் சொல்லி உவமேயத்தைப் பெற வைப்பது பிறிது
மொழிதல் அணியாகும்.
மாமரத்தில் பழுத்த பழங்கள் விழாமலிருக்க, அதிலிருந்து
பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன. ஆகையால், இளமையிலேயே
அறம் செய்யுங்கள். (உலகில் கிழவர்கள் இருக்க இளைஞர்கள்
இறந்து விடக்கூடுமாதலால், இளைஞர்களும் அறஞ் செய்தல்
வேண்டும்.)
|