பக்கம் எண் :

பொருளணிகள் 431


ஐய அணி

ஒப்புமையின் ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று
ஐயமுறுதல் ஐய அணியாகும்.

இவள் கண், கயலோ வண்டோ அறியேன்.

வேற்றுமை அணி

வேற்றுமையை விளக்கும் அணி வேற்றுமை அணி உவமான
உவமேயங்களுள் ஒன்றுக்குச் சிறப்பைத் தருவதே இதன் நோக்கம்.

1. தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்; நாவினால் சுட்ட வடு
ஆறாது.

2. சந்திரனும் சான்றோரும் ஒப்பாவார்: சந்திரன் மறுத்
தாங்கும்; சான்றோர் அது தாங்கார்.

சிலேடை அணி

ஒரு சொல் பல பொருள் தருவது சிலேடை அணியாகும்.

1. சிவப்புத்தேள் - (அ) சிவப்புத் தேள். (ஆ) சிவனாகிய
புத்தேள். (புத்தேள்-தேவன்)

2. புத்தியில்லாதவன்- (அ) புத்தியில் மிகுந்த ஆதவனை
(சூரியனை)ப் போன்றவன். (ஆ) மடையன்.

பிறிதினவிற்சி அணி

ஒன்றை இயல்பாகக் கூறாமல் வேறு வகையால் கூறுவது
பிறிதினவிற்சி அணியாகும்.

தசரதர் புத்தென்னும் நரகைக் கடந்தார். (மகனைப் பெற்றார்)

வஞ்சப் புகழ்ச்சி அணி

பழிப்பதுபோலப் புகழ்வதும், புகழ்வதுப்போலப் பழிப்பதும்
வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.