பக்கம் எண் :

432நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

1. கயவர்கள் தேவரைப் போன்றவர்கள்; ஏனென்றால்,
அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்வார்கள்.

2. அரசே, நீ கண்ணுக்கு இனியவனாயில்லை; கேள்விக்கு
இனியவனாய் உள்ளாய். உன் பகைவர் கேள்விக்கு இன்னார்;
கண்ணுக்கு இனியர். (நீ வீரன்; உன் பகைவர் வீரமற்றவர்.)

வேற்றுப்பொருள் வைப்பணி

பொதுப்பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப்
பொருளால் பொதுப்பொருளையும் கூறுவது வேற்றுப்பொருள்
வைப்பணியாகும்.

காந்தியடிகள் தீண்டாமையை அசைத்து விட்டார்கள்.
பெரியவர்களால் ஆகாத செயல் இல்லை.

உருவக அணி
(Metaphor)

உவமானத்தையும் உவமேயத்தையும் வேறாகக் கூறமால்
ஒன்றுபடுத்திக் கூறுவது உருவக அணியாகும்.

1. மக்கள் மனம் என்னும் நிலத்தில் அன்பு என்னும் பயிரை
வளர்த்தல் வேண்டும்.

2. தமிழ்ச் சரித்திர மண்டலம் பெருமக்களென்னும் விண்
மீன்கள் இல்லாது வறிதே இருந்தது. மாங்குடி மருதனார் முதலிய
சிற்றொளிகளே தமிழ் வானத்தில் திகழ்ந்து விளங்கின.
இளங்கோவடிகளாகிய பெருநக்ஷத்திரம் அப்போது தோன்றவில்லை.
தேவார ஆசிரியர்கள், ஆழ்வாராதியர்கள் என்னும் விண் மீன்களும்
இன்னொளி வீசவில்லை. திருத்தக்கதேவர் என்னும் செவ்விய
நல்லொளியும் முகஞ்செய்து திகழவில்லை. சேக்கிழார் என்னும்
விடி வெள்ளியும் இன்னும் அரும்பவில்லை. விண்ணையும்
மண்ணையும் தன்னிடமாகக் கொண்டு தனது பேரொளிப்
பெருவெள்ளத்தில் இரு பேருலகையும் ஒளிமயமாக்கிய கம்பர்
என்னும் சூரியனும்