பக்கம் எண் :

பொருளணிகள் 433


உதிக்கவில்லை. பேரொளி மண்டிலங்களில் ஒன்றுமின்றிச்
சிறுவெள்ளிகள் சிற்றொளி செய்து விளங்கிய தமிழ்ச்
சரித்திரமண்டிலத்தே நாம் இன்று போற்றித் தொழுகின்ற வள்ளுவராகிய
தெய்வ ஒளித் திங்கள் தோன்றிற்று.

- s. வையாபுரிப் பிள்ளை

3. மாணவர்களே, இலக்கணம் என்னும் திறவுகோல்
கொண்டு இலக்கியக் கோயிற் கதவுகளைத் திறந்து தமிழ்ப்
பெருந்தேவியைக் கண்டு களிகூருங்கள்.

ஏகதேச உருவக அணி

ஒரு பாதியை உருவகப்படுத்தி மற்றொரு பாதியை
உருவகப்படுத்தாமல் கூறுவது ஏகதேச உருவக அணியாகும்.
ஏகதேசம்-ஒரு பாதி.

1. திருக்குறளாகிய கலங்கரை விளக்கின் உதவியால்
வாழ்க்கையாகிய கடலை வழிதெரிந்து கடந்து செல்லலாம். இஃது
உருவக அணி.

திருக்குறளாகிய கலங்கரை விளக்கின் உதவியால் வாழ்க்கையை
வழி தெரிந்து கடந்து செல்லலாம். இஃது ஏகதேச உருவக அணி.

இதில் திருக்குறள் கலங்கரை விளக்காக உருவகப்
படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், வாழ்க்கை கடலாக உருவகப்படுத்தப்
படவில்லை. ஆதலால், பின்னது ஏகதேச உருவக அணியாகும்.

2. மக்கள் மனத்தில் அன்புப் பயிரை வளர்த்தல் வேண்டும்.

அணிகளை உரைநடையில் அளவாய்ப் பயன்படுத்த வேண்டும்
என்பதறிக.