பக்கம் எண் :

434நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


37.
சிறுகதை எழுதுதல்

சிறுகதை இலக்கியம், சிறந்த இலக்கியம். இவ்விலக்கியம்
ஆங்கிலக் கல்வியால் தமிழ் மொழிக்குக் கிடைத்த நன்மையாகும்.
1921க்கு முன்னே தமிழ் நாட்டில் இன்றைய சிறுகதை
(Short Story)
இலக்கியம் தோன்றவில்லை. பழைய முறையில் அமைந்த கதைகளும்
நெடுங்கதைகளாகிய நவீனங்களும் தோன்றின. நல்ல இனிய
நெடுங்கதை இலக்கியம் (Novel) ஒன்றிரண்டு தவிரப் பல தோன்றவில்லை.
பின் வங்காள மொழியிலிருந்தும் மராத்தி மொழியிலிருந்தும் நன்கு
மொழி பெயர்க்கப்பட்ட சில தலைசிறந்த நெடுங்கதை இலக்கியங்களே
தமிழகத்தில் உலவி வந்தன. இப்போது சில ஆண்டுகளாகத் தமிழில்
நல்ல நெடுங்கதைகளும் வந்து கொண்டிருக்கின்றன. எனினும், இன்று
மக்கள் ஒன்றைக் குறைந்த நேரத்தில் படித்து முடிக்க விரும்புகிறார்கள்.
ஆகவே, அவர்களுடைய மனம், புத்தம் புதிய சிறு கதை இலக்கியம்
படிப்பதை நாடி நிற்கிறது. அதனால், இந்நாளில் நாளிதழ்களும் சனி
ஞாயிறு மலர்களும் வார மாத வெளியீடுகளும் சிறுகதைகளைத்
தாங்கி வருகின்றன. சிறு கதைகளுக்கு இன்று வரவேற்பு மிகுதியாக
இருக்கிறது. வார மாத வெளியீட்டாசிரியர்களும் நாளிதழாசிரியர்களும்
நல்ல சிறுகதைகளைத் தங்கள் இதழ்களில் வெளியிட ஆவலுடன்
எதிர்பார்த்த வண்ணமாயிருக்கிறார்கள். நல்ல சிறுகதைகள்
எழுதுபவர்களுக்குப் பணமும் கிடைக்கிறது. ஆதலால், இளம்
எழுத்தாளர்கள் சிறு கதைகளை நல்ல முறையில் எழுதத் தெரிந்து
கொள்ளுதல் நன்று.

இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இச் சிறுகதை இலக்கியம்
19-ஆம் நூற்றாண்டில் தோன்றி இன்று உச்ச நிலையை