பக்கம் எண் :

சிறுகதை எழுதுதல் 435


அடைந்துவிட்டது. நெடுங்கதையாகிய நவீனத்தைச் சில நாள்கள்
படிக்க வேண்டியிருந்தால், அந்த நாடுகளில் மக்கள் சிறிது நேரத்தில்,
ஒரு ரயில் நிலையத்தில் ஏறி ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு
ரயில் நிலையத்தில் இறங்குவதற்குள் கிடைக்கக் கூடிய ஓய்வு நேரத்தில்,
படித்து இன்புறுதற்குரிய பொழுது போக்குக்கு ஏற்ற சிறு கதைகளைப்
படிக்க விரும்பினார்கள். அதனால், அந்த நாடுகளில் சிறுகதை
இலக்கியம் தோன்றியது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே
இலக்கியத்தரமுள்ள சிறு கதைகள் தோன்றின. அமெரிக்காவில்
வாஷிங்டன் இர்விங், எட்கார் ஆலன்போ போன்றவர்களும்,
ருஷ்ய நாட்டில் துர்க்கனேவ், செக்காவ் முதலியவர்களும்,
பிரான்ஸில் மாப்பஸான் போன்றவர்களும் தலை சிறந்த சிறுகதைகள்
எழுதி வெளியிட்டார்கள். அந்த நாடுகளின் மாத வார நாளிதழ்களும்
மக்கள் மனப்பான்மையை உணர்ந்து சிறுகதைகளை வெளியிட்டன.
மற்ற மேலைநாடுகளிலும் இந்நிலையே ஏற்பட்டது. நம் நாட்டிலும்
இந்நாளில் மக்கள் நெடுங்கதைகளைவிடச் சிறு கதைகளைப் படித்து
இன்புற விரும்புவதால், சிறு கதைகளின் தேவை
இன்றியமையாததாகிவிட்டது.

முற்காலத்தில் தமிழ் நாட்டில் கதைகள் இருந்தன. 1800
ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயே கீரிப்
பிள்ளைக் கதையாகிய பஞ்சதந்திரக் கதை காணப்படுகிறது.
விநோதரச மஞ்சரி, தக்காணத்துப் பூர்வகதைகள், ஆயிரம் தலை
வாங்கிய அபூர்வசிந்தாமணி கதை, தமிழறியும் பெருமாள் கதை,
பஞ்சதந்திரக் கதை, வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை
முதலியன தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்தன.
முன்னே குறிப்பிட்டவாறு 1921வது ஆண்டுக்குப் பின்னேதான்
சிறுகதை இலக்கியம் இந்நாட்டில் தலை காட்டத் தொடங்கிற்று
எனலாம்.