பக்கம் எண் :

436நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

இந்த இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களான
பேரறிஞர் வ.வே.சு. ஐயர், 1923 ல் தொடங்கி நடத்திய ‘பஞ்சாமிர்த’
இதழ் ஆசிரியர் அ.மாதவய்யா, புதுமைப் பித்தன் என்ற புனை பெயர்
பூண்ட சொ. விருத்தாசலம், கு.ப. ராஜ கோபாலன், ராஜாஜி, கல்கி
ரா. கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன், பேரறிஞர் அண்ணா
முதலியவர்கள் சிறுகதையை வளர்த்தார்கள். இந்தச் சிறுகதை
வளர்ச்சியில் ‘மணிக்கொடி’ (1933-37) என்ற இதழும் சிறந்த
தொண்டாற்றியுள்ளது குறிப்பிடற்குரியது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வகையில் சிறுகதை எழுதியதில் சிறந்திருந்தனர். தொடக்கக் காலத்தில்
வ.வே.சு. ஐயர் எழுதிய சிறுகதைகள் கலையுணர்வோடு விளங்கின.
சிறுகதைக்குள்ள கலையுணர்வு வ.வே.சு. ஐயர் கதைகளிலே உயிர்த்
துடிப்போடு விளங்குகின்றன என்றும், உருவத்திலும் உள்ளடக்கத்திலும்
ஓர் இலக்கியப் புதுமை இவர் கதையில் தென்படுகிறது என்றும், இவர்
எழுதிய கதைகளுள் முக்கியமானது ‘குளத்தங்கரை அரசு மரம்’ என்னும்
கதையே என்றும் ஞானபீடப் பரிசையும் வேறு பெரும் பரிசுகளையும்
பெற்றுத் தலைசிறந்த எழுத்தாளராக விளங்கிய அகிலன் தமது
‘தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும்
கட்டுரையில் குறிப்பிடுகிறார். இவரே புதுமைப்பித்தனைப் பற்றிக்
கூறுகையில், ‘‘புதிய புதிய உத்திகளைக் கையாண்டு, உட்பொருளுக்கு
ஏற்றபடி புதுப்புது நடைகளிலும் உருவங்களிலும் சிறுகதைகளைப்
படைத்தவர்” என்றும் கு.ப. ராஜகோபாலனைப் பற்றிக் கூறுகையில்,
‘‘கு.ப. ராஜகோபாலன் தமக்கென்று ஒரு போக்கை வகுத்துக் கொண்டு,
அந்தப் போக்கிலேயே கலையழகு மிளிரும் சிறுகதைகளை எழுதியவர்”
என்றும் கூறுகிறார். இவ்வாறு சிறுகதை இலக்கியம் 80 ஆண்டுகளாக
நல்ல முறையில் வல்லவர் சிலரால் தமிழகத்தில் வளர்த்து
வந்திருக்கிறது. தமிழர்கள் குடியேறி வாழ்ந்து வரும்
ஸ்ரீலங்காவிலும் மலேஷியாவிலும் சிங்கப்பூரிலும் பல சிறுகதைத்
தொகுப்புகள்