5. பண்புப் பெயர்
(Abstract Nouns or Names of Qualities)
பண்பை அல்லது குணத்தைக் காட்டுவது பண்புப் பெயர் பண்பாவது
ஒரு பொருள் தோன்றும் காலத்து உடன் தோன்றி அது அழியும்
அளவும் நிற்பது.
அன்பு, கருமை, சதுரம், குட்டை, இனிப்பு, அழகு, உருண்டை,
வட்டம்.
6. தொழிற்பெயர் (Verbal Noun or Noun of Action)
தொழிலைக் காட்டுவது தொழிற்பெயர். இதில் விகுதி பெற்ற
தொழிற்பெயர். விகுதி பெறாத தொழிற்பெயர். முதன்நிலைத்
தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர், காலங்காட்டும்
தொழிற்பெயர். உடன்பாட்டுத் தொழிற்பெயர், எதிர்மறைத் தொழிற்பெயர்
என்று பல வகைகள் உண்டு.
6.1 விகுதி பெற்ற தொழிற்பெயர்
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, வி, வு, உள், காடு,
இ, மதி, து, மை, அடம், ஆனை, அரவு, வான் முதலிய விகுதிகளுள்
ஏற்ற ஒன்றைப் பெற்று வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
தல் - செய்தல்
அல் - ஓடல
அம் - நோக்கம்
ஐ - கொலை
கை - வருகை
வை - பார்வை
கு - போக்கு
பு - மடிப்பு
தி - மறதி
|
சி - உணர்ச்சி
வி - கல்வி
வு - நினைவு
உள் - கடவுள்
காடு - வேக்காடு
இ - வெகுளி
மதி - ஏற்றுமதி, இறக்குமதி
து - வருவது
மை - வாராமை
|
|