பக்கம் எண் :

பெயர் வகைகள்63

அடம் - கட்டடம்
(இதைக் கட்டிடம் என்று
எழுத வேண்டுவதில்லை.
ஆனை- வாரானை
அரவு - தேற்றரவு
வான் - செய்வான் ஏன்?
(செய்தல் என்பது பொருள்)

6.2 விகுதி பெறாத தொழிற்பெயர்

கூத்து

6.3 முதனிலைத் தொழிற்பெயர்

பகுதியே தொழிற்பெயராக வருவது முதனிலைத் தொழிற்
பெயராகும்.

ஓர் அறை அறை. ஓர் அடி அடி.
ஓரு குட்டு குட்டினான்.

இங்கு அறைதல், அடித்தல், குட்டுதல், ஆகிய தொழிற்
பெயர்களின் பகுதிகள் மட்டும் தொழிற்பெயராகி நிற்கின்றன.
முதனிலையே தொழிற்பெயராகி நிற்பதால் இவை முதனிலைத்
தொழிற் பெயர்களாகும். முதனிலைத் தொழிற் பெயர்கள் மிகமிகச்
சிலவே உண்டு.

6.4. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

சூடு, பாடு, பேறு, வீடு, வழிபாடு, வேறுபாடு.

சுடுதல், படுதல், பெறுதல், விடுதல், வழிபடுதல், வேறுபடுதல்
என்னும் தொழிற்பெயர்களின் முதனிலைகளே மேற்குறித்தவாறு
முறையே திரிந்துள்ளன என்பதறிக. (சுடுதல், சுடு-சூடு.)

6.5 காலம் காட்டும் தொழிற்பெயர்

நேற்று வந்தது நல்லது - இறந்தகாலத் தொழிற்பெயர்.
இன்று வருகிறது எதற்கு? - நிகழ்காலத் தொழிற்பெயர்.
நாளைக்கு வருவது கூடாது - எதிர்காலத் தொழிற்பெயர்.