6.6. உடன்பாட்டுத் தொழிற்பெயர்
செய்தல், வணங்கல்.
6.7. எதிர்மறைத் தொழிற்பெயர்
செய்யாமை, வணங்காமை.
II. பிறப்பு நோக்கிய பெயர்
வினையாலணையும் பெயர் (Verb-Noun Denoting the Agent)
வினைமுற்றனாது பெயர்ச் சொல்லின் தன்மையை அடைந்து
வேற்றுமை உருபை ஏற்கத் தக்கதாக இருப்பின் அது வினையாலணையும்
பெயர் எனப்படும். வினையோடு அணைந்து வருவது வினையாலணையும்
பெயர்.
வினையாலணையும் பெயரானது உயர்திணையாகவும் இருக்கும்,
அஃறிணையாகவும் இருக்கும். மேலும் இது தன்மை, முன்னிலை,
படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் வரும்.
கற்றோர் கூறுவர்
கற்றோர் என்பது உயர்தினை வினையாலணையும்
பெயர்.
ஓடியது விழுந்தது
ஓடியது என்பது அஃறிணை ஓருமை
வினையாலணையும் பெயர்
பறந்தவை விழுந்தன
பறந்தவை என்பது அஃறிணைப்
பன்மை வினையாலணையும் பெயர்.
வந்தேனை (வந்த என்னை)
இது தன்மை ஒருமை வினையாலணையும்
பெயர்.
வந்தாயை (வந்த உன்னை)
இது முன்னிலை ஓருமை வினையாலணையும்
பெயர்.
வந்தானை (வந்தவனை)
இது படர்க்கை வினையாலணையும்
பெயர்.
|