III. பயன்படுத்தும் முறையால் வரும் பெயர்கள்
ஆகு பெயர் (Transfered Noun or Synecdoche)
ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்கு
ஆகிவருவது ஆகுபெயர்.
தலைக்கு இரண்டணா கொடு.
தலை என்பது இங்கு ஆளைக் குறிப்பதால் ஆகுபெயர்.
தயிரை இறக்கு.
தயிர் இருக்கும் பானையைக் குறிப்பதால் தயிர் என்பது
ஆகுபெயராகும்.
என் வீடு பட்டினி
வீடு என்பது வீட்டிலுள்ளவர்களைக் குறிப்பதால் வீடு என்பது
ஆகுபெயராகும்.
குடிப்பெயர்
சாதியைக் குறிப்பது குடிப் பெயர்.
அந்தணன், அரசன், வணிகன், வேளாளன், குறவன், இடையன்,
மறவன், உழவன், பரதவன் முதலியன.
கிளைப்பெயர்
உறவினைக் குறித்து வருவது கிளைப்பெயர்.
தந்தை, தாய், அண்ணன், தமக்கை, தம்பி, மாமன், மாமி.
அளவுப்பெயர்
எண்ணல், நீட்டல், முகத்தல், எடுத்தல், ஆகிய நான்கு வகை
அளவின் பெயரைக் காட்டும் பெயர் அளவுப் பெயராகும்.
ஒன்று, நூறு; சாண், அடி; வீசை, கழஞ்சு, ஆழாக்கு, படி;
கிராம், மீட்டர்.
|