பக்கம் எண் :

66நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


சுட்டுப் பெயர்

சுட்டின் அடியாய்ப் பிறக்கும் பெயர் சுட்டுப் பெயர்.

அவள், அவள், அவர், அது, அவை.

இவன், இவள், இவர், இது, இவை.

வினாப் பெயர்

வினா அடியாகப் பிறக்கும் பெயர் வினாப் பெயராகும்.

எவன், யாவன், யாது, யா. (யா-பன்மை வினாப்பெயர்)

எவள், யாவள், யாது, யாவை.

எவர், யாவர், எது, எவை.

தொகுதிப் பெயர்
(Collective Noun)

தொகுதியைக் குறிக்கும் பெயர் தொகுதிப் பெயர். இதனை ஒரு
பெயர்ப் பொதுச் சொல் என்றும், பலவின் இயைந்த ஒரு சொல் என்றும்
கூறலாம்.

சேனை, கொத்து, குழு, மாலை, தோப்பு, சோலை, மக்கள்,
மன்பதை, அடிசில், பண்டம், குழாம் முதலியவை.

(சேனை - பலவகை வீரர்கள் அடங்கியது. அடிசில் - உண்பன,
தின்பன, பருகுவன ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு சொல்.)

இத்துணை என்று குறிப்பிடாப் பலவின்பாற் பெயர்கள்.

பல, சில

தன்மைப் பெயர்
(First Person)

பேசுபவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் குறித்து வரும்
பெயர் தன்மைப் பெயர் எனப்படும். இதில் ஒருவரை குறிப்பது தன்மை
ஒருமைப் பெயர்; பலரைக் குறிப்பது தன்மை பன்மைப் பெயர்.
தன்னைப் பற்றியது தன்மைப் பெயர்.

யான், நான் -
யாம், நாம், யாங்கள், நாங்கள் -
தன்மை ஒருமைப் பெயர்.
தன்மைப்பன்மைப்
பெயர்கள்.