பக்கம் எண் :

பெயர் வகைகள்67


முன்னிலைப் பெயர் (Second Person)

பேசுபவனது சொற்களை முன்னின்று கேட்பவனையும்
அவனைச் சார்ந்தவர்களையும் உணர்த்தி வரும் பெயர் முன்னிலைப்
பெயர் எனப்படும். இதிலும் ஒருவரைக் குறிப்பது முன்னிலை ஒருமைப்
பெயர். பலரைக் குறிப்பது முன்னிலைப் பன்மைப் பெயர்
முன்னிருப்பவரைப் பற்றியது முன்னிலைப் பெயர்.

நீ -
நீர், நீவிர், நீயிர், நீங்கள்,
எல்லீர் -
முன்னிலை ஒருமைப் பெயர்
முன்னிலைப் பன்மைப் பெயர்கள்.

படர்க்கைப் பெயர் (Third Person)

தன்மை, முன்னிலை ஒழிந்த பெயர்கள் எல்லாம் படர்க்கைப்
பெயர்கள். இதுவும் ஒருமை, பன்மை என இருவகைப்படும். தன்மை
முன்னிலைகளை விட்டு நீங்கிப் படர்ந்திருப்பது படர்க்கை எனப்படும்.

மனிதன், கண்ணன், வீடு - படர்க்கை ஒருமைப் பெயர்.

மனிதர், வீடுகள், நாய்கள் - படர்க்கை பன்மைப் பெயர்.

பொதுப் பெயர்

தான், தாம், எல்லாம் என்னும் இம்மூன்று பெயர்களும்
உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணைகளுக்கும் பொதுவாய்
வருவனவாகும். அதனால் இவற்றைத் திணைப் பொதுப்பெயர் என்பர்.
இவை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் வந்து
இடப் பொதுப்பெயராகவும் வரும்.

உயர்திணை
இராமன்தான் -
சீதைதான் -
அவர்கள்தாம் -
அவர்கள் எல்லாம் -
அஃறிணை
நாய்தான் -
அதுதான் -
அவைகள்தாம் -
அவைகள் எல்லாம் -
ஒருமை
ஒருமை
பன்மை
பன்மை