இடப்பொதுப் பெயர்
யாமெல்லாம் - தன்மைப் பன்மை
நீங்கள் எல்லாம் - முன்னிலைப் பன்மை
அவர்கள் எல்லாம் - படர்க்கைப் பன்மை
குறிப்பு: நாங்கள்தான், நீங்கள்தான், அவர்கள்தான் என்று
எழுதுவது இலக்கணப்படி தவறாகும்.
எல்லாம் என்பது முழுமைப் பொருளையும் கொடுக்கும்
உடம்பெல்லாம் வலிக்கிறது.
பெயரில் கவனிக்க வேண்டுவன
பெயரில் கவனிக்க வேண்டுவன திணை, பால், எண், இடம்,
வேற்றுமை என்பன.
திணை (Class)
திணை என்பது வகுப்பு.
அஃது உயர்திணை என்றும் அஃறிணை என்றும் இரு வகைப்படும்.
உயிருள்ளனவற்றுள் மனிதர், தேவர் போன்ற பகுத்தறிவுள்ளவற்றை
உயர்திணைப் பொருளாகவும்;
விலங்கு, மரம் போன்ற பகுத்தறிவற்ற உயிரினங்களையும், கல்,
மண் போன்ற உயிரற்ற பொருள்களையும் அஃறிணைப்
பொருள்களாகவும
கூறுவது தமிழிலக்கண மரபாகும்.
உயர்வு அல்லாத திணை அஃறிணை.
அல் + திணை = அஃறிணை.
மக்கள், தேவர். - உயர்திணை
(Rational Class)
நாய், மரம், மலை. - அஃறிணை
(Irrational Class)
அஃறிணையாகவும், உயர்திணையாகவும் கொள்ளத்தக்கவை.
குழந்தை அழுகிறான். கடவுள் இருக்கிறார்.
குழந்தை அழுகிறது. கடவுள் இருக்கிறது.
|