பக்கம் எண் :

பெயர் வகைகள்69

சந்திரன் மறைந்தான். சூரியன் காலையில் தோன்றுகிறான்.
சந்திரன் மறைந்தது. சூரியன் மாலையில் மறைகிறது.

குழந்தையையும் கடவுளையும் உயர்திணையாகவும், அஃறிணை
யாகவும் கூறுவது மரபு.

இக்காலத்தில் ஞாயிறு தோன்றியது என்றும் மதி மறைந்தது
என்றும் எழுதுவது வழக்கமாகிவிட்டது.

உயிர் போகிறது.
உடம்பு நோகிறது.
உயிர், உடம்பு. - இவை அஃறிணை.

பால் (Gender)

பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும். அஃது
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என
ஐந்து வகைப்படும். முதல் மூன்றும் உயர்திணைக்கும், மற்றவை
இரண்டும் அஃறிணைக்கும் உரியவை.

உயர்திணைப் பால்கள் மூன்று
ஆண்பால்
(Masculine Gender)

இராமன், மாமன், அண்ணன், அவன்.

பெண்பால் (Feminine Gender)

சீதை, மாமி, தமக்கை, அவள்.

பலர்பால்
(Masculine Plural or Feminine Plural, or both combined)

மாந்தர், மக்கள், பலர், அவர்.

குறிப்பு : மாந்தர், மக்கள் ஆகிய இவற்றிற்கு ஒருமை இல்லை.
மாந்தர்கள், மக்கள்கள், பலர்கள் என்று எழுதுவது தவறு.