அஃறிணைப் பால்கள் இரண்டு
ஒன்றன்பால்
மாடு, கிளை, அது.
|
பலவின் பால்
மாடுகள், கிளைகள், அவை.
|
ஆண்பால் விகுதிகள்
உயர்திணையுள் ஆண்பாலைக்
குறித்தற்குப் பெரும்பாலும்
அன், ஆன், மான், ன் விகுதிகளாய் வரும்.
அன் - பொருளன்
ஆன் - நாட்டான்
|
மான் - கோமான்
ன் - பிறன்
|
சில ஆண்பாற் பெயர்கள் இகரத்தில் முடிவதுண்டு
இவன் பெரிய தொழிலாளி.
பெண்பால் விகுதிகள்
பெண்பால் பெரும்பாலும் அள், ஆள், ள், இ
என்னும்
விகுதிகளைக் கொண்டு முடியும்.
அள் - நல்லவள்,
ஆன் - அடியாள்
|
இ - குள்ளி
ள் - பிறள் |
குறிப்பு : ஒருவன் - ஆண்பால். ஒருத்தி - பெண்பால். அள்
என்பது பெண்பால் விகுதியாய் இருப்பினும் ஒருவன் என்பதற்கு
ஒருவள் என்பது பெருந்தவறு என்பதறிக. ஒருத்தி என்பதே பெண்பால்;
இதுதான் மரபு. எவ்வாறு உயர்ந்தோர் செப்பினரோ அவ்வாறு செப்புதலே
மரபு. பெருமாள் என்பது மட்டும் முருகனையும் திருமாலையும்
குறிப்பதுண்டு. பெருமாள் - பெருமையை ஆள்பவன் என்பது
இங்குப் பொருளாகும் என்பதறிக. மான் விகுதியிலுள்ள ‘ன்’ ‘ள்’ ஆகத்
திரிந்தது எனலுமாம்.
|