பக்கம் எண் :

பெயர் வகைகள்71


ஆண்பால் பெண்பால் பெயர்கள்

ஆண்பால் - பெண்பால்
ஒருவன் - ஓருத்தி
நல்லவன் - நல்லவள்
தலைவன் - தலைவி
தோழன் - தோழி
கள்வன் - கள்வி
பாங்கன் - பாங்கி
சங்கரன் - சங்கரி
பேரன் - பேர்த்தி
பாணன் - பாடினி
குறவன் - குறத்தி
மறவன் - மறத்தி
பார்ப்பனன் - பார்ப்பனி
பண்டிதன் - பண்டிதை
நடிகன் - நடிகை
தேவன் - தேவி
இல்லாளன்* - இல்லாள்
ஆண்பால் - பெண்பால்
திருடன் - திருடி
தமயன் - தமக்கை
பெருமான் - பெருமாட்டி
நம்பி - நங்கை
மாணாக்கன் - மாணாக்கி
மாணவன் - மாணவ
சிறுவன் - சிறுமி
சிறுக்கன் - சிறுக்கி
ஆசிரியன் - ஆசிரியை
செல்வன் - செல்வி
திருவாளன் - திருவாட்டி
உபாத்தியாயன் - உபாத்தியாயினி
திருநிறைசெல்வன்- திருநிறைசெல்வி


*"இல்லாளன் வைக்க என"-

பெரியபுராணம் - காரைக்காலம்மையார் - செய்.20.

குறிப்பு : நோயாளி, குணசாலி, நொண்டி, ஊமை, பாவி என்னுஞ்
சொற்கள் ஆண்பால், பெண்பால் இரண்டிற்கும் பொதுவாகும்.

நோயாளி அவன்.
குணசாலி அவன்
நொண்டி அவன்.
ஊமை அவன்.
பாவி அவன்.
நோயாளி இவள்
குணசாலி இவள்.
நொண்டி இவள்.
ஊமை இவள்.
பாவி இவள்.