பக்கம் எண் :

72நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


ஆண்பாலில் மட்டும் வரும் பெயர்கள்

குரிசில், தோன்றல், விடலை, நண்பன்.

குறிப்பு : நண்பனுக்குப் பெண்பால் நண்பி என்பது தவறு.

புலவனுக்குப் பெண்பால் இல்லை. புலவி என்பது தவறு புலவன்
என்னும் சொல்லுக்குப் பெண்பால் சொல்ல வேண்டுமானால் பெண்பாற்
புலவர் என்க.

பெண்பாலில் மட்டும் வரும் பெயர்கள்

செவிலி, தையல், மங்கை, மடந்தை.

குறிப்பு : இல்லாளுக்கு ஆண்பால் இல்லை என்பர். இல்லாளன்
என்பது ஆண்பால் ஆகும். விதவைக்கு ஆண்பால் இல்லை.

உயர்திணைப் பலர்பால்

அர், ஆர், இர்,ர், மார், கள் ஆகிய விகுதிகள் பெற்றுள்ள
பெயர்கள் உயர்திணைப் பலர்பாற் பெயர்களாகும்.

அர் - தோழியர், நங்கையர்.
ஆர் - தேசத்தார், தென்னகத்தார்.
இர் - மகளிர்
ர் - பிறர்
மார் - தாய்மார்
கள் - கோக்கள் (அரசர்கள்)

குறிப்பு : உயர்திணையில் பலர்பாலுக்கு அர், மார் விகுதிகள்
வரும்போது அவற்றுடன் கள் விகுதி சேர்த்து எழுதுதல் உண்டு.

அவர்கள், அரசர்கள், தம்பிமார்கள்.

அவர் அரசர் என்று எழுதும்போது இவற்றை மரியாதைப்
பன்மைகளாகக் கருதலாம். ஆதலால், அவற்றுடன் அவர்கள்