அரசர்கள் என்று கள் விகுதி சேர்ந்தால் ஐயமின்றி அவை பன்மை
என்று உணரலாம். பெயர்களில் கள் விகுதி சேர்க்கும்போது
அப்பெயர்களுக்குரிய வினைமுற்றுகளிலும் கள் விகுதி சேர்த்தல்
வேண்டும்.
அவர்கள் போனார்கள். அரசர்கள் கூறினார்கள்.
மரியாதைப் பன்மை
நான் என் தாயார் சொற்படி நடக்கிறேன்.
ஒளவையார் நல்வழி இயற்றினார்.
குறிப்பு : ஒளவையார் தன் நூலில் கூறியவாறு நடந்திருக்கிறார்
என்று எழுதுவது தவறு. ஒளவையார் தம் நூலில் கூறியவாறு
நடந்திருக்கிறார் என்று எழுதுக.
ஒருவர் என்னும் சொல்
ஒருவர் என்னும் சொல் ஆண்பால், பெண்பால், இரண்டிற்கும்
பொதுவானது. இஃது ஒருமைப் பொருளைக் கொடுத்தாலும் பலர் பால்
வினைமுற்றையே கொள்ளும்.
என் நண்பன் வீட்டுப் பெண்களுள் ஒருவர் வேலை செய்கிறார்.
என் வீட்டு ஆண்களுள் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார்.
ஒன்றன்பால் பெயர்கள்
அஃறிணை ஒன்றன்பால் பெயர்கள் ‘து’ விகுதி பெறும்.
பிறிது, அது, எது, சிறியது, நல்லது.
பலவின்பால் பெயர்கள்
அஃறிணைப் பலவின்பால் பெயர்களுக்கு அ, வை, கள் ஆகியவை விகுதிகளாக வரும்.
அ -
வை -
கள் -
|
நல்லன, பிற.
நல்லவை, அவை.
குதிரைகள், மரங்கள்.
|
|