அஃறிணையில் ஆண்பால் பெண்பால்
அஃறிணையில் ஆண்பாலைக் காட்டுவதற்கும் பெண் பாலைக்
குறிப்பதற்கும் தனிப்பட்ட சொற்கள் மிகுதியாக இல்லை; ஒரு சிலவே
உண்டு ஆண் குயில் என்றும் பெண் குயில் என்றும் ஆண் பெண்
சொற்களைச் சேர்த்துக் கூறுவதே வழக்கம்.
ஆண்பால்
களிறு
கலை
கடுவன்
சேவல் |
பெண்பால்
பிடி
பிணை
மந்தி
பேடை |
இப்படி வருபவை ஒரு சிலவே.
எண் (Number)
எண், ஒருமை பன்மை என இருவகைப்படும். ஒன்றைக் குறிப்பது
ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. உயர்தினையில்
ஆண்பாலைக் குறிக்குஞ் சொல்லும், பெண்பாலைக் குறிக்குஞ் சொல்லும்,
அஃறிணையில் ஒன்றன் பாலைக் குறிக்குஞ் சொல்லும் ஒருமைச்
சொற்களாகும். உயர்திணையில் பலரைக் குறிக்குஞ் சொல்லும்,
அஃறிணையில் பலவற்றைக் குறிக்குஞ் சொல்லும் பன்மைச் சொற்களாகும்.
|
தம்பி -
|
உயர்திணை ஆண்பால் ஒருமை
|
|
தங்கை -
|
உயர்திணைப் பெண்பால் ஒருமை
|
|
அது, நாய். -
|
அஃறிணை ஒருமை
|
|
அவர், அவர்கள். -
|
உயர்திணைப் பன்மை
|
|
அவை, நாய்கள். - |
அஃறிணைப் பன்மை |
இடம்
(Person)
பேசுவோர் இடத்தைக் குறிப்பது இடம்.
தன்னைக் குறிப்பது தன்மை இடம்.
|