பக்கம் எண் :

76நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

முன்னிருப்பவரைக் குறிப்பது முன்னிலை இடம்.

படர்ந்து சென்றுள்ளவரைக் குறிப்பது படர்க்கை இடும்.

தன்மை, முன்னிலை, படர்க்கையில் வரும் பெயர்களை மூவிடப்
பெயர்கள் என்பர்.

தன்மைப் பெயர்
(First Person)

ஒருமை
நான், யான்.
பன்மை
நாம், நாங்கள், யாம், யாங்கள்.

முன்னிலைப் பெயர் (Second Person)

ஒருமை
நீ
பன்மை
நீர், நீங்கள்

படர்க்கைப் பெயர் (Third Person)

ஒருமை
அவன்
அவள்
தங்கை
பன்மை
அவர்கள்
அவர்கள்
தங்கைமார்
உயர்திணை
நாய்
மரம்
அது
நாய்கள்
மரங்கள்
அவை
அஃறிணை

மூவிடங்களுக்கும் வரும் பொதுப் பெயர்கள்
(Common Reflexive pronouns)

தான், தாம், எல்லாம் என்பன மூன்று இடங்களுக்கும் வரும்
பொதுப்பெயர்கள்,

தான் - நான் தான், நீ தான், அவன் தான்.

தாம் - நாம் தாம், நீர் தாம், அவர்கள் தாம்.