பக்கம் எண் :

பெயர் வகைகள்77

எல்லாம் - நாம் எல்லாம், நீர் எல்லாம், அவர் எல்லாம்,
நாங்கள் எல்லாம், நீங்கள் எல்லாம், அவர்கள்
எல்லாம்.

சில வேளைகளில் எல்லாம் என்பது முழுமை என்னும்
பொருளிலும் வருவதுண்டு.

நாள் எல்லாம் வேலை செய்தேன்.

உடம்பு எல்லாம் வலி.

மேனி எல்லாம் பசலையாயிற்று. (சொல். நூற்பா 186) (பசலை -
தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் தேமல் போன்ற நிறமாற்றம்)

குறிப்பு : நீர் தான், அவர் தான், அதுவெல்லாம் என்று எழுதுவது
தவறு. நீர் தாம், அவர் தாம், அவையெல்லாம் என்று எழுதுக.

தன்மை முன்னிலை படர்க்கைச் சொற்களைச் சேர்த்தெழுதும்
போது முடிக்கும் முறை.

1. நானும் நீயும் செய்வோம்.

2. யானும் அவனும் செய்தோம்.

3. நானும் நீயும் அவனும் செய்தோம்.

4. நாங்களும் நீங்களும் அவர்களும் செய்தோம்.

5. நீயும் நானும் செய்தோம்.

6. நீங்களும் நாங்களும் செய்தோம்.

7. நீங்களும் நாங்களும் அவர்களும் செய்தோம்.

முன்னிலை படர்க்கை இடத்துச் சொற்கள் தன்மைச் சொல்லோடு
இயைந்து வழித் தன்மைப் பன்மை வினைமுற்றால் முடிதல் வேண்டும்.

1. அவனும் நீயும் செய்கிறீ்ர்கள்.

2. நீங்களும் அவர்களும் செய்தீர்கள்.