பக்கம் எண் :

தமிழர் மதம் 153

New Page 1

    குரு லிங்க சங்கமம் - குரு விலங்கத் திருக்கூட்டம். இலக்கு - இலக்கம் - இலங்கம் = குறி.

    அத்துவா - அதர்வு அல்லது அதர்வம்.

    அத்துவா சோதனை - அதர்நிலை நோட்டம்.

    குரு = பருமன், பெருமை, கனம். குரு - குரவன் = பெரியோன், கனம் (கண்ணியம்) உள்ளோன்.

    சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்.

    நமப் பார்வதி பதயே! - மலைமகள் மணாள போற்றி!

    ஹரஹர மஹா தேவ! - அரவர மாதேவ!

    அரம் = சிவப்பு. அரம் - அரன் = சிவன்.

    இதை ஹர என்று திரித்து அழிப்பவன் என்று பொருள் கூறுவது ஆரிய வழக்கு.

7. மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டையா?

    மதவெறியும் அதனா லேற்படும் போருமே, மக்கள் மகிழ்ச்சி யாய் வாழ்வதற்கும் அமைதியாய் முன்னேறுவதற்கும் தடையாய் நிற்கின்றன. மதம் தன்னளவில் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையன்று. தமிழர் எல்லாத் துறையிலும் தலைசிறந்து சீருஞ் சிறப்புமாக வாழ்ந்தது, குமரிநாட்டு மதவாழ்க்கைக் காலமே. இன்றும் அறிவியல் கம்மியத் துறைகளில் தலைசிறந்து திங்களை யடைந்த அமெரிக்கர், கடவுள் நம்பிக்கை யுள்ளவரே.

    "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்னும் உண்மையை யுணர்ந்து , மாந்தரெல்லாரும் கடவுளின் மக்களான உடன் பிறப்பென்று கருதி, "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று அன்பொடு கூடி வாழ்வதற்கே மதம் ஏற்பட்டது. ஆயின், மாந்தர் தம் மனம் போனவாறு மதத்தைத் திரித்து, தம்மொடு மாறுபட்ட கருத்தி னரைப் பகைத்து, அவரினின்று பிரிந்து போவதும் அவரொடு பொருவதும், வெறியான மதத்தின் விளைவேயன்றி நெறியான மதத்தின் விளைவன்று. பன்னூற்றாண்டு கூடி வாழ்ந்த இந்தியரும் பாக்கித்தானியரும், பகைவராய்ப் பிரிந்துபோனமைக்கு, மத வெறியே கரணியம்.

    மக்கள் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, மதம் முந்நிலைப் பட்டுள்ளது. அவற்றுள் உயர்ந்த நிலையான கடவுட் சமயத்தைக் கடைப்பிடிப்பின், கோவில் குளமோ, உருவ வழிபாடோ தேவை