பக்கம் எண் :

தமிழர் மதம் 157

எர
  எரியாது. பல வுலகங்கட்கும் இரு சுடரையும்  விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும்.  வேலை செய்யாத தூக்க வேளையாகிய இராக்காலத்திற்கு, வெப்ப மான நெருப்பொளி விளக்காகாது குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத் தக்கது.
   
    (3) பிற கோள்களைப்போற் சுற்றாது ஒரேயிடத்திலிருக்கும்  கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண் டையாயிருப்பதும், அளவிடப்படாத நீள்பெருங்காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யணையா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதை யியக்கி யாளும் ஒரு பரம்பொருள் இருத்தல் வேண்டும்.
   
    (4) கோள்கள் ஒன்றேடொன்று முட்டாது தன்தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந்திருப்பதும், இயற்கைக்கு
   
    (5) காலமும் இடமும் தொடக்கமும் ஈறும் இல்லாதவை யாதலால், இற்றை மக்களுலகந் தோன்றுமுன்,  எண்ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றியழிந்திருத்தல் வேண்டும். இதைத் தான்,
   
  "படைத்து விளையாடும் பண்பி னோனும்
  துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
  தன்னில் வேறு தானென் றிலோனும்
  அன்னோன் இறைவ னாகும்என் றுரைத்தனன்"
   
  மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவவாதி).
   
    (6) மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டாயிற் றென வைத்துக்கொள்ளினும், நூற்றுக்கணக்கானதலைமுறைகள் கழித்திருத்தல் வேண்டும். பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட்டொகை இன்றுநூறுகோடிக் கணக்காகப் பெருகி யுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனைய ராயினும், அத்தனையரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவிலுள்ளனர். கைவரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும்.
   
    (7) "கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" என்பது  இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப்படுகின்றது.