பக்கம் எண் :

32தமிழர் மதம்

New Page 2

    செய்யான் = சிவந்தவன், செம்பூரான்.

    செய் - சேய் = சிவப்பு, செவ்வாய், முருகன்.

    சேய் - சேயது - சேய்து = சிவந்தது. சேய்து - சேது.

    சேது + ஆ = சேதா. சேது + ஆம்பல் = சேதாம்பல்.

    சேய் - சேயன் - சேயான் = செந்நிறத்தான்.

    சேயவன் = செவ்வாய், முருகன்.

    சேயோன் = முருகன், சிவன்.

    சேய்-சே. சேத்தல் = சிவத்தல்.

    சே = சிவப்பு, சேங்கொட்டை.

    சே-சேத்து = சிவப்பு.

    சேத்து - சேந்து = சிவப்பு, தீ, அசோகு.

    சேந்து - சேந்தன் = சிவந்தவனான முருகன்.

    சேந்தன் - சேந்து.

    ஒ.நோ: வேந்தன் - வேந்து, முருகன் - முருகு.

    சேந்து + இல் = சேந்தில் - செந்தில்.

    சேந்து + ஊர் = சேந்தூர் - செந்தூர் (திருச்செந்தூர்).

    செய் - செய்ம்மை - செம்மை - செவ்வை.

    செம் - செவ் - செவ - செவப்பு.

    செவ - சிவ - சிவப்பு - சிகப்பு.

    சிவ - சிவல் - சிவலை.

    சிவ - சிவம் - சிவன் = சிவந்தவன், நெருப்பின் கூறாக நின்று
          உலகத்தை இயக்கும் இறைவன்.

    தீவண்ணன், அந்திவண்ணன், அழல்வண்ணன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.

சிவன் மாலை

    குறிஞ்சிநிலத்திற்குரிய கொன்றை மாலை. கொன்றை வேய்ந் தோன் - கொன்றை வேந்தன்.

சிவனூர்தி

    குறிஞ்சிநிலத்திற்குரிய (வெண்) காளை. அதன் வெண்ணிறம் தூய்மை குறித்தது.