New Page 1
ஆதலால், துறவறத்தான் பொறையினும்
இல்லறத்தான் பொறையே பெரிதாம்.
பேரின்ப வீட்டைப் பெற்றதாகப்
பெரியபுராணங் கூறும் சிவனடியாருட் பெரும்பாலார், இல்லறத்தில் நின்றவரே.
இருவகை யறவாழ்க்கையையும் இறைவன்
ஏற்கின்றான் என் பதை யுணர்த்தற்கே, அவனுக்கு அம்மையப்ப வடிவும் அந்தண வடிவும் குறிக்கப்பட்டுள்ளன.
மெய்ப்பொருளியல்
"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் |
|
வகைதெரிவான்
கட்டே யுலகு" |
(குறள். 27) |
என்றார் திருவள்ளுவர். ஆகவே,
நிலம் நீர் தீ வளி வெளி என்னும்
பூதங்கள் ஐந்தும், அவற்றின் சிறப்பியல்புகளான நாற்றம் சுவை ஒளி ஊறு ஓசை என்னும் ஐந்தும்,
அவற்றையறியும் கருவிகளான மூக்கு நாவு கண் மெய் செவி என்னும் அறிவுப் பொறிகள் ஐந்தும், பல்வேறு
வினைசெய்யும் கை கால் வாய் எருவாய் கருவாய் என்னும் கருமப்பொறிகள் ஐந்தும், மதி, உள்ளம்
(சித்தம்) மனம் நானுணர்வு என்னும் அகக்கரணங்கள் நான்கும், அவற்றைக் கொண்டு பொருள்களை ஆய்ந்தறியும்
ஆதனும், அதன் வினைகட்கெல்லாம் இடம் போன்று நிலைக்களமாகிய காலமும் தூண்டுகோலான ஊழும் ஆகிய
இரண்டும், எல்லாவற்றையும் இயக்கும் இறைவனும், ஆக மொத்தம் மெய்ப்பொருள்கள் (தத்துவங்கள்)
இருபத்தெட்டாம்.
வருந்தி வேலை செய்யின், கரியவன்
அகங்கை கருத்தலும் செய்யவன் அகங்கை சிவத்தலும் இயல்பு. அதனாற் கருத்தல் செய்தல் என்னும்
வினைகள் தோன்றின. கரு - கருமம் = செய்கை, வினை, தொழில். கரு - கருவி, கரு - கரணம் = செய்கை,
கருவி.
கருத்தல் என்னும் வினை பண்டே
வழக்கற்றது.
கருமம் - கம்மம் - கம் = தொழில்,
கொல்லத் தொழில்.
கம் - கம்மியம் - கம்மியன்.
கம் - கம்மாளன்.
கருமம் - கருமி - கம்மி = ஐங்கொல்லருள்
ஒருவன்.
மதித்தல் = அளவிடுதல். மதி = அளவிட்டறியும் அகக்கரணம்.
ஊழ் வினையின் பயன்.
"வகை தெரிவான்" என்றதனால்
ஆதனும், 'காலமறிதல்' என்னும் அதிகாரத்தாற் காலமும், 'ஊழ்' என்னும் அதிகாரத்தால் ஊழும்,
கடவுள் வாழ்த்ததிகாரத்தால் இறைவனும் அறியப்பட்டன.
|