பக்கம் எண் :

108தமிழர் வரலாறு-1

நால்வகைப் பாக்கட்குள்,வெண்பாவும்கலிப்பாவும் போன்றவை வேறெம்மொழியினுங்காணமுடியாது. இறைவனை வழுத்துவதற்கும் காதற்செய்தியை வண்ணிப்பதற்கும், ஒத்தாழிசைக்கலிவகை போன்ற யாப்பு வேறொன்றுமில்லை.

அணி

பொருளை விளக்குவதற்கும் தெரியாதபொருளைத் தெரிவிப் பதற்கும் உவமை இன்றியமையாததாகையாலும், பெரும்பாலும் எல்லா அணிகட்கும்உவமையே மூலமாதலாலும், செய்யுளியற்று வாரின்திறமைக்குத்தக்கவாறு இயல்பாகவே அணி அமையுமாதலாலும், காலஞ் செல்லச்செல்லப் புதிதுபுதிதாகஅணிகள் தோன்றுமாதலாலும், முதனூலாசிரியர்அணிவகையில் விளக்கக் கருதியது உவமை யொன்றே.

உவமை எல்லா மொழிகளிலுங்கையாளப்படுமேனும், உள்ளுறையென்னும் உவமைவகைதமிழுக்கே சிறப்பாக வுரியதாம். ஒரு தலைவனைத்தலைவி அல்லது தோழி விளிக்கும் போது, அவன்தன்மை புலப்படுமாறு அவன் நாட்டுக் கருப்பொருளின்செயலை எடுத்துக் கூறுவது உள்ளுறை யுவமமாம்.

"பைந்தலைய நாகப் பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை யையுற்று - மந்தி

தெளியா திருக்குந் திருநாடா வுன்னை
ஒளியாது காட்டுன் னுரு." 

(நள. கலிநீங்.70)

இது இருதுபன்னனின் தேரோட்டியாகவந்திருந்த நளனை நோக்கித் தமயந்தியின் தோழிகூறியது.

நளன் கார்க்கோடகன் என்னும்பாம்பினாற் கடியுண்டு நிறம் மாறியிருந்ததனால்,தெளிவாக அடையாளந் தெரியாது மயங்கி நின்றதோழி, "உன் நாட்டு மந்தி, ஐம்பிரிவான கமுகம்பாளையைப் பார்த்து ஐந்தலை நாகமோ என்றுஐயுற்றுத் தெளியாதிருக்கின்றது" என்றது,"நானும் உன்னைப் பார்த்து நளனோ வேறொருவரோஎன்று மயங்கித் தெளியாதிருக்கின்றேன்"என்னும் பொருள்பட நிற்பதால், உள்ளுறை யுவமமாம்.

இசை

தலைக்கழகக் காலத்திலேயே,மிடற்றிசையும் (வாய்ப்பாட்டும்), தோல் துளைநரம்பு உறை (. கஞ்சம்) என்னும் நால்வகைக்கருவியிசையும் வளர்ச்சி யடைந்திருந்தன.