பக்கம் எண் :

தமிழர் வரலாறு-159

மொழிவளர்ச்சியில், எண்வேற்றுமைகளும் முக்காலமும் பல்வகை எச்ச முற்றுகளும், முழுநிறைவான சொற்றொடரமைப்பும், செம்புக் காலத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். எழுத்துவகையில் ஒலியெழுத்துத் (Phoneticcharacters) தோன்றியிருக்கும். ஆயின்,எகர வொகரக் குறிலுயி ரொலிகளும் ளகர ழகர றகரனகர மெய் யொலிகளும் பெரும்பாலுந் தோன்றியிரா.இக்காலத்தில்தான், பிராகிருதம் என்னும்வடதிரவிட மொழியாளரின் முன்னோர் வட நாவலம்(இந்தியா) சென்றிருப்பர். பாவகையில் ஆசிரியமும்கலியும் தோன்றியிருக்கும். மக்களின் எண்ணுந்திறன் பதினாயிரம்வரை சென்றிருக்கும்.

மதத்துறையில், மறுமையுணர்வும் விண்ணுலகக் கொள்கையும் தோன்றியிருக்கலாம்.


4. உறைக்காலம் (Bronze Age)

(தோரா. கி.மு. 15,000 - 10,000)

உறை யென்பது வெண்கலம். இது முறியெனவும்படும்.

"கஞ்சம் உறைவெண் கலமா கும்மே." 

(பிங்.6:140)

"வெண்கலப் பெயரும் விழுமமும் பெருமையும்
..........................................
ஓரிடைச் சொல்லும் வாழ்நாளும் உறையெனல்." 

(பிங்.10:184)

எட்டுப் பங்கு செம்பும், ஒரு பங்குதகரமுங் கலந்த கலப்பு மாழையே உறை. இதுசெம்புபோலத் தனிமாழை யன்மையாலும், வெண்ணிறக்கலவடிவிலேயே மக்கள் இதைக் கண்டமையாலும், கருமிய(காரிய) வாகுபெயராக வெண்கலம் என்னும் பெயர்பெற்றது.

செம்பு, கும்பா, கிண்ணம், குடம்,வட்டில் முதலிய கலங்களும்; மாடவிளக்கு,குத்துவிளக்கு, பாவைவிளக்கு முதலிய திரிவிளக்குவகைகளும்; வாள், கறண்டி முதலிய கருவிகளும் உறையாற்செய்யப்பட்டன.

வெண்கல ஏனத்தில் வார்த்த அல்லதுவைத்த நீருங் கட்டியு மான உணவுப்பொருள்கள்,சிறப்பாகப் புளிப்புப் பண்டங்கள், கைத்துங்கெட்டும் போகாவாதலால், பொன்னும் வெள்ளியும்கிடையாத ஏழை மாந்தர்க்கும் இடைத்திறவகுப்பார்க்கும் வெண்கல ஏனமே சிறந்தமாழைக்கலமாக இருந்துவந்தது. செப்புக்குடம் என்னும்நீர்க்கலம் செம்பினாற் பெயர் பெறினும்,வெண்கலத்தி னாலேயே இன்றுஞ் செய்யப்பட்டுவருகின்றது.