பக்கம் எண் :

62தமிழர் வரலாறு-1

வேய் - வேய்ந்தோன் = மகுடமணிந்தோன்.

வேய்ந்தோன் - வேய்ந்தன் - வேந்தன்.

கொன்றைவேய்ந்தோன் = கொன்றை மாலையை அல்லது மலரைத் தலையிற் சூடிய சிவன்.

கொன்றைவேய்ந்தோன் - கொன்றைவேந்தன் = சிவன்.

வேந்தன்-வேந்து. ஒ.நோ:அரசன் - அரசு.

அமைச்சன் - அமைச்சு, பாங்கன் - பாங்கு, பார்ப்பான்- பார்ப்பு.

முடியுடை மூவேந்தர் என்னும் வழக்கை நோக்குக.

"வண்பொழில் மூவர் தண்பொழில்வரைப்பின்" 

(1336)

என்று தொல்காப்பியங் கூறுவதால்கி.மு.7ஆம் நூற்றாண்டு வரை இச் சிறப்புரிமைகாக்கப்பட்டு வந்ததென அறியலாம். அதன்பின்,கடைக் கழக காலத்தில் குறுநில மன்னர் தலையெடுத்ததால், மூவேந்தரும் இவ் வதிகாரத்தைஇழந்துவிட்டனர்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" 

(சிலப்.11:19-22)

என்று இளங்கோவடிகள் பாடுவதாலும்,தமிழன் பிறந்தகம் குமரி நாடாதலாலும்,குமரிக்கண்டத் தமிழ்நில முழுதும் பழம்பாண்டிநாடாதலாலும், மூவேந்தருள்ளும் முதலில்தோன்றியவன் பாண்டியனே என்பது அறியப்படும்.பிற்காலத்தில், நாவலந் தேயத்தின்கீழ்ப்பாகத்தையும் மேற்பாகத்தையும் துணையரசராகஅல்லது மண்டிலத் தலைவராக ஆளுமாறு அமர்த்தப்பெற்றபாண்டியன் குடியினர் இருவரே, சேரசோழராகமாறியிருத்தல் வேண்டும்.

பண்டி = வண்டி(சக்கரம், சகடம்)

பண்டி - பாண்டி = 1. வட்டமானவிளையாட்டுச் சில்.

2. அதைக்கொண்டு விளையாடும்விளையாட்டு (வட்டாட்டு)

3. மாட்டு வண்டி. "அகவரும்பாண்டியும்" (பரிபா.10:16)

4. கூடாரப்பண்டி. (சிலப். 14:168, அரும்.)

5. (உருண்டு திரண்ட) எருது (பரிபா.20:17,குறிப்பு)

ஒ.நோ: குண்டு - குண்டை = எருது.

பாண்டி - பாண்டியம் = 1. எருது."செஞ்சுவற் பாண்டியம்"

(பெருங். உஞ்சைக் .38:32)