நாடுமாகிய தென்னிலத்தின் தென்கோடியிலிருந்தபெருமலைத் தொடருக்கும், வடகோடியிலிருந்தபேராற்றிற்கும், குமரி யென்னும் காளியின் பெயரேஇடப்பெற்றது. பாண்டியன் மதிக்குலத்தா னாதலால்,அவன் முதல் தலைநகர் அவன் குலமுதல்வன்பெயரையொட்டி மதுரை யெனப்பட்டது.மதி-மதிரை-மதுரை. ஒ.நோ; குதி - குதிரை. குதித்தல் =தாண்டுதல். வைகை மதுரை பிற்காலத்த தாதலால்,'மருத முன்றுறை' என்னும் தொடரினின்று மதுரைப்பெயர் வந்த தென்பது பொருந்தாது. பஃறுளி மதுரைப்பெயரே வைகை மதுரைக்கும் பிற்காலத்தில்இடப்பட்டது. தலைக்கழகக் கால நாகரிகமும் பண்பாடும் ஆரியர் தென்னாடு வருகைக்கு முற்பட்டமுதலிரு கழகத் தனித்தமிழ் நூல்களனைத்தும்அழியுண்டு போயினும், மொழியமைப்பினின்றும்முக்கழக வரலாற்றினின்றும் கடைக்கழகப்பாடல்களிலும் பனுவல்களிலுமுள்ளகுறிப்புகளினின்றும், தலைக்கழகக் கால நாகரிகப் பண்பாட்டை ஒருவாறுணரலாம். மொழி அஃறிணையினின்று மக்களைப்பிரித்துக் காட்டுவதும், ஒரு நாட்டு மக்களின்நாகரிகப் பண்பாட்டு அளவுகோலும் மொழியே.மொழியினாலேயே மாந்தன் நரன் என்று பெயர்பெற்றிருத்தல் வேண்டும். நரலுதல் = 1. ஒலித்தல். "ஆடுகழை நரலும் சேட்சிமை" (புறம். 120). 2. கத்துதல்."வெண்குருகு நரல வீசும் நுண்ப ஃ றுவலைய" (அகம். 14). 3. பேசுதல். நரல் - நரன் = மாந்தன். "வறிதே நிலையாத விம்மண் ணுலகின் நரனாக வகுத்தனை" (தேவா.934:2). நரன் - நரம் = மாந்தப்பிறவி. "நரத்திலும் பிறத்திநாத" (திவ். திருச்சந்.29). வானரம் (வால்நரம்)=வாலையுடைய மாந்தன் போன்ற விலங்கு. "வானர முகள" (சீவக. 1168). நரன் - வ. நர. வானரம் - வ. வாநர. நர என்னுஞ் சொல்லிற்கு வடமொழியில்வேரில்லை. வானர என்னுஞ் சொல்லை 'நர ஏவ' என்றுபிரித்து, நரனைப் போன்றது என்று பொருள் கூறுவர்வடமொழியாளர். மொழிக்கு அடுத்தபடியாக, மாந்தனின்சிறப்பாற்றல் முன்னுதல். முன்னுதல்=கருதுதல்.முன்னுவான் (வானீற்று நி.கா.வி.எ.) - முன்னான் (ம.) AS.munan (to think).
|