பக்கம் எண் :

தமிழர் வரலாறு-185

முன்-முன்னம்=1. கருத்து."முன்ன முகத்தி னுணர்ந்து" (புறம். 3). 2. மனம்.(திவா.). முன்னம் - முனம் - மனம் = உள்ளம்.

மனம்- வ. மனஸ். L. mens, ME, mynd, E, mind.

முன் - மன் = கருதும் ஆற்றலுள்ள மாந்தன்.

மன்பது - மக்கட் கூட்டம், "மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்" (பரிபா. 15:52).

மன்பது - மன்பதை = மக்கட்கூட்டம்.

"மன்பதை காக்குநின் புரைமை" (புறம். 210).

மன்- வ.மநு. OS., OHG, man, E man.

மொழியிலுங் கருத்திலும் அன்றும்இன்றும் என்றும் சிறந்தவன் தமிழனே.

ஒவ்வொரு நாட்டிலும், மொழியைவளர்ப்பவர் பொதுமக்கள்; இலக்கியத்தைவளர்ப்பவர் புலமக்கள். மொழிகள் இயன்மொழியும்திரிமொழியும் என இருவகைப்படும். தானேதோன்றியது இயன்மொழி; ஒன்றினின்று திரிந்ததுதிரிமொழி. ஆகுபெயர்கள் இருமடியும் மும்மடியும்ஆகுவது போன்று, திரிமொழிகளும் இருமடியும்மும்மடியுந் திரியும். திரவிடம் தமிழினின்றுதிரிந்த திரிமொழி; ஆரியம் திரவிடத்தினின்றுதிரிந்த இருமடித் திரிமொழி.

குமரிநாடு தமிழன் பிறந்தகம்மட்டுமன்றி மாந்தன் பிறந்தகமு மாதலால், தமிழேஇம்மியும் ஏனைமொழி கலவாத முழுத் தூயஇயன்மொழியாகும்.

இருதிணை ஐம்பால் ஈரெண்மூவிடங்களாகிய கிளவியிலக் கணமும்,நுண்பிரிவுகளையுடைய எண் வேற்றுமைப் பெயரிலக்கணமும், நந்நான்கு வகைப்பட்ட முக்காலவினையிலக்கணமும், வளமை, செம்மை, மரபு, தகுதி,தூய்மை முதலிய சொற்றிறங்களும்; சுருக்கம், தெளிவு,மதிப்புறவு, இடக்கரடக்கல், மங்கலம் முதலியசொற்றொடரமைதிகளும் கொண்டு; பதினெண் திரவிடமொழிகட்குத் தாயும் பதினாறாரியப் பிரிவுகட்குமூலமுமா யமைந்தது தமிழ்.

இருதிணை

எல்லாப் பொருள்களையும், உயிரும்மெய்யும் உயிர்மெய்யும் (உயிரியும்) என மூவகையாகவகுத்தாலும், தனக்கும் பிறர்க்கும் நல்லதுந்தீயதுமாகிய இரண்டையும் பகுத்தறியும் பண்பையேசிறப்பாகக் கொண்டு, அஃதுள்ளதை உயர்ந்தவகுப்பென்றும்