அஃதில்லதைத் தாழ்ந்தவகுப்பென்றும் துணிந்து, அதற்கேற்ப, உயர்ந்தவகுப்பைக் குறிக்குஞ் சொற்கட்கே ஆண் பெண்என்னும் இருபாலீறும், தாழ்ந்த வகுப்பைக்குறிக்குஞ் சொற்கட்கெல்லாம் ஒருமை பன்மையென்னும் ஈரெண்ணீறுமே கொடுத்து, மொழியைவளர்த்தவர் தமிழப் பொதுமக்களே. மக்களும்தேவரும் உயர்ந்த வகுப்பு; மற்றவை தாழ்ந்த வகுப்பு. எ-டு : ஒருமை : முருகன் வந்தான், வள்ளிசென்றாள். - உயர்திணை. காளை உழுகிறது, ஆவு கறக்கின்றது, கல் குத்துகிறது, அது பறக்கின்றது. - அஃறிணை. பன்மையீறும் இருவகுப்பிற்கும்வெவ்வேறாம். பன்மை : அரசர் வாழ்ந்தனர் (வாழ்ந்தார்), ஆசிரியன்மார் பேசினர். - உயர்திணை. காளைகள் உழுகின்றன, மாடுகள் மேய்கின்றன, அவை இனிக்கின்றன, இலைகள் அசைகின்றன. - அஃறிணை. மக்கள், குருக்கள், அவர்கள்,வந்தார்கள் என்பன வழுவமைதியாகக்கொள்ளப்பெறும். "இலக்கியங் கண்டதற் கிலக்கணமியம்பல்" என்னும் முறையில், பொதுமக்கள்வகுத்த வகுப்புகட்கே இலக்கண நூலார் உயர்திணைஅஃறிணை யெனப் பெயர் கொடுத்தனர். இன்றும்,கல்லா மாந்தர் இக்குறியீடுகளை அறியாவிடினும்,இருதிணை முறைப்படியே பேசுவர். உயிரையும் பாலையுமேயன்றிப் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டுவேறெம் மொழியாரும் பொருள்களைப் பகுத்திலர்.தெலுங்கில் மகத், அமகத் என்றது தமிழைப்பின்பற்றிப் பிற்காலத்திலேயே. வளமை நால்வகையடை: வாழையிலை, நெல்தாள்,கரும்புத் தோகை, பனையோலை. பல்வகைப் பிஞ்சு: மா வடு, பலா மூசு,வாழைக் கச்சல், தென்னங் குரும்பை, பாக்கு நுழாய். காய்ப்பு மாறியபின் தோன்றும் பிஞ்சுநுரு (நொரு). யானைப்பெயர்கள்: ஆம்பல், உம்பல்,உவா, எறும்பி, ஓங்கல், கரி, கறையடி, கைம்மலை,கைம்மா, தூங்கல், தும்பி, தோல், நால்வாய்,
|