பக்கம் எண் :

இயனிலைப் படலம்153

பரதம் = இலக்கம் கோடிக் கோடாகோடி. இது 1-ன் பின் 24 சுன்னங்கொண்டது. பரதம் என்பது கடல் வணிகத்தின் பெயர்.

படவன்-பரவன்-பரதவன்-பரதவம்-பரதம். இனி, பரத கண்டம் எனினுமாம். பரதன் திங்கட்குலத்தைச் சேர்ந்த ஒரு பழம் பாண்டியனே.

எடுத்தல்

4 கஃசு
8 பலம்
5 சேர்
5 வீசை
8 வீசை
20 மணங்கு
= 1 தொடி அல்லது பலம்
= 1 சேர்
= 1 வீசை
= 1 துலாம்
= 1 மணங்கு
= 1 கண்டி

பொன்னளவை

5 கடுகு
5 சீரகம்
4 நெல்
2 குன்றிமணி
2 மஞ்சாடி
10 பணவெடை
= 1 சீரகம்
= 1 நெல்
= 1 குன்றிமணி
= 1 மஞ்சாடி
= 1 பணவெடை
= 1 கழஞ்சு

முகத்தல்

360 நெல்
2 செவிடு
2 ஆழாக்கு
2 உழக்கு
2 உரி
8 நாழி
2 குறுணி
2 பதக்கு
3 தூணி
21 மரக்கால்
18 மரக்கால்
4 (சிறு) படி
40 வள்ளம்
6 மரக்கால்
64 மூட்டை
5 மரக்கால்
80 பறை
= 1 செவிடு அல்லது சுண்டு
= 1 ஆழாக்கு
= 1 உரி
= 1 நாழி அல்லது படி
= 1 குறுணி அல்லது மரக்கால்
= 1 பதக்கு (பாண்டிநாட்டில் 10 படி)
= 1 தூணி
= 1 கலம் (தஞ்சை வட்டார வழக்கு)
= 1 கோட்டை (பாண்டிநாட்டு வழக்கு)
= 1 புட்டி (மேலை வடார்க்காட்டு வழக்கு)
= 1 வள்ளம்
= 1 கண்டகம் (சேலம் வட்டார வழக்கு)
= 1 மூட்டை
= 1 கரிசை
= 1 பறை
= 1 கரிசை