பக்கம் எண் :

154தமிழ் வரலாறு

படியை இடங்கழி என்பது சேரநாட்டு வழக்கு. சிறுபடியை மானம் என்பது மேலை வடார்க்காட்டு வழக்கு.

நீட்டல்

நீட்டளவு

 
8 அணு
8 தேர்த்துகள்
8 பஞ்சிழை
8 மயிர்
8 நுண்மணல்
8 கடுகு
8 நெல்
12 பெருவிரல்
2 சாண்
4 முழம்
500 கோல்
4 கூப்பீடு
= 1 தேர்த்துகள்
= 1 பஞ்சிழை
= 1 மயிர்
= 1 நுண்மணல்
= 1 கடுகு
= 1 நெல்
= 1 பெருவிரல்
= 1 சாண்
= 1 முழம்
= 1 கோல் அல்லது பாகம்
= 1 கூப்பீடு
= 1 காதம்

பரப்பளவு

 
144 சதுர அடி
100 குழி
20 மா
= 1 குழி
= 1 மா
= 1 வேலி

சுவைப்பெயர்

கைப்பு (கசப்பு), கார்ப்பு (உறைப்பு), இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு , துவர்ப்பு எனச் சுவை ஆறாம்.

ஊற்றுப் பெயர்

வெம்மை, தண்மை, வன்மை, மென்மை, நொய்ம்மை (பளுவின்மை), சீர்மை (பளுவு), இழுமெனல் (வழுவழுப்பு), சருச்சரை (சுரசுரப்பு) என ஊறு எட்டாம்.

நாற்றப் பெயர்

நறு நாற்றம், தீ நாற்றம் என நாற்றம் இரண்டாம்.

இயற்பண்புப் பெயர்

எ-டு: நன்மை, தீமை, மதிமை, மடமை.

செயற்பண்புப்பெயர்

எ-டு: அன்பு, பகை, அடக்கம், சினம், பொறுமை, பொறாமை.