வினையாக வெளிப்படுவதும்,
வினைப்பெயராற் குறிக்கப்படுவதும்
செயற்பண்பாம்.
(6) தொழிற்பெயர் (Verbal
Noun)
தொழிற்பெயர் எனினும் வினைப்பெயர்
எனினும் ஒக்கும். சிறுவினை பெருவினை என வினை
(தொழில்) இருவகைப் படும். வருதல், போதல்,
உண்டல், உடுத்தல், போன்றவை சிறுவினை; உழவு, நெசவு,
தச்சு, கல்வி, ஆட்சி போன்றவை பெருவினை.
எல்லாப் பெயர்களும் பின்வருமாறு
வெவ்வேறு வகையில் இவ்விருபாற்படும்.
(1) பொதுப் பெயர் X
சிறப்புப் பெயர்
பல பொருட்குப் பொதுவான பெயர்
பொதுப்பெயர்; ஒன்றற்கே சிறப்பாக வுரியது
சிறப்புப் பெயர்.
எ-டு: ஆறு,
நகர், புலவன்-பொதுப்பெயர் (Comman
Noun)
காவிரி, மதுரை,
நக்கீரன்- சிறப்புப் பெயர் (Proper
Noun)
அரசன் அல்லது வேந்தன் என்னும் பெயரை
நோக்க. பாண்டியன் என்பது பொதுவிற் சிறப்பும்,
நெடுஞ்செழியன் என்னும் பெயரைநோக்க,
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்
என்பது சிறப்பிற் சிறப்பும் ஆகும்.
(2) இயற்பெயர் X
ஆகுபெயர்
இயல்பாக ஒரு பொருட்கு உண்டான பெயர்
இயற்பெயர்; ஒரு பொருளின் பெயர் இன்னொன்றற்கு
ஏதேனுமொரு தொடர் பில் ஆகி வருவது ஆகுபெயர்.
எ-டு: காளை (மாடு), பொன் (கனியம்),
வற்றல்(வினை)- இயற்பெயர்.
காளை
(மறவன்),பொன்(பொற்காசு), வற்றல்
(வற்றிய காய்கனி)-ஆகுபெயர் (Metonymy,
Synecdoche)
(3) தனிநிலைப்பெயர் X
குழூஉப் பெயர்
ஒரு தனிப்பட்ட பொருளின் பெயர்
தனிநிலைப்பெயர்; பல பொருள் சேர்ந்த
கூட்டத்தின் பெயர் குழூஉப்பெயர்.
எ-டு: காய், ஆடு, தமிழன்
-தனிநிலைப்பெயர்
குலை, மந்தை, கழகம் -குழூஉப் பெயர்
( Collective
Noun)
|