செய்து, செய்யுது என்னும் இருவகை
முற்றுகளும் பிற் காலத்தில் தன்மைக்கே
வரையறுக்கப்பட்டன.
காலவகைப் பிரிவுகள்
வினைச்சொல் காட்டும் இறந்தகாலம்,
நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றும்
தனித்தனி தனிப்பு, தொடர்ச்சி, நிறைவு, நிறைவுத்
தொடர்ச்சி என நால்வகைப்படும்.
இறந்தகாலப் பிரிவுகள்
எ-டு: வந்தான்-இறந்தகாலத் தனிப்பு (Past
Indefinite)
வந்துகொண்டிருந்தான்-இறந்தகாலத்தொடர்ச்சி
(Past Continuous)
வந்திருந்தான்-இறந்தகால
நிறைவு (Past perfect)
வந்துகொண்டிருந்திருந்தான்-இறந்தகால
நிறைவுத் தொடர்ச்சி (Past
perfect continuous)
நிகழ்காலப் பிரிவுகள்
வருகிறான்-நிகழ்காலத்
தனிப்பு (Present
Indefinite)
வந்துகொண்டிருக்கிறான்-நிகழ்காலத்தொடர்ச்சி
(Present
Continuous)
வந்திருக்கிறான்-நிகழ்கால
நிறைவு (Present
perfect)
வந்துகொண்டிருந்திருக்கிறான்
-நிகழ்கால நிறைவுத் தொடர்ச்சி (Present
perfect Continuous)
எதிர்காலப் பிரிவுகள்
வருவான்-எதிர்காலத்
தனிப்பு (Future Indefinite)
வந்துகொண்டிருப்பான்-எதிர்காலத்தொடர்ச்சி
(Future
Continuous)
வந்திருப்பான்-எதிர்கால
நிறைவு (Future Perfect)
வந்துகொண்டிருந்திருப்பான்-எதிர்கால
நிறைவுத் தொடர்ச்சி (Future
Perfect Continuous)
4. வினைவகைகள்
வினைகள், வெவ்வேறுவகையில்,
ஒவ்வொன்றாகவும் இவ்விரண்டாகவும் பற்பலவாகவும்
வகுக்கப்பெறும்.
(1) தெரிநிலைவினை x
குறிப்புவினை
செயலுங்காலமும் வெளிப்படையாய்த்
தெரிய நிற்பது தெரிநிலை வினை; அவற்றைக்
குறிப்பாகக் காட்டுவது குறிப்புவினை.
|