பக்கம் எண் :

இயனிலைப் படலம்169

எ-டு: வந்தான், போய், இருந்த - தெரிநிலைவினை.
உண்டு, இல்லை, வேறு - குறிப்புவினை.

குறிப்புவினை

குறிப்புவினை, பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் அறுவகைப் பொருட்பெயரை அடியாகக் கொண்டு தோன்றி உடைமை, உரிமை, செய்கை என்னும் மூவகைப் பொருள் நிலைக்களத்தில் நின்று, இருத்தல் அல்லது ஆதல் வினையைக் குறிப்பாக உணர்த்தும்.

இருத்தல்வினை முக்காலத்திற்கும் பொதுவாகவோ, ஒரு காலத்திற்கே சிறப்பாக வுரியதாகவோ, இருக்கும். ஆதல் வினை என்றும் ஒரு காலத்திற்குச் சிறப்பாக வுரியதாகவே யிருக்கும்.

எ-டு:

பொருள்நிலைக்களம் அடிப்பெயர் குறிப்புவினை
உடைமை
உரிமை மதுரை (இடம்)
"
உடைமை
" பெரு (மை) "
ஒப்புமை (குணம்)
செய்கை
குழை (பொருள்)
மதுரையான்
மூதிரை (காலம்)
கை (சினை)
பெரியன்
அன்னன
நடை (தொழில்)
குழையன்
.
மூதிரையான்
கையன்
.
.
நடையன்

நேற்றுவரை பொன்னன் (பொன்னனாயிருந்தான்)-இ.கா.
இன்று பொன்னன் (பொன்னனாயிருக்கின்றான்-நி. கா.
இனிமேற் பொன்னன் (பொன்னனாயிருப்பான்)- எ.கா.
கடவுள் ஒப்புயர் வில்லாப் பெரியன்-முக்காலம்
மழைபெய்து பயிர் நல்ல (நல்லவாயின)-இ.கா.

இவன் பொன்னன் என்பதில், பொன்னன் என்பது ஆளைக் குறிப்பின், பெயர்ப்பயனிலையாம்.

மூதிரை = ஆதிரை (வ.)

‘கடவுள் ........பெரியன்‘ என்பதில் ‘பெரியன்‘ என்பது முக்காலத்திற்கும் பொதுவாயினும், பெரியனா யிருக்கின்றான் என்று நிகழ்கால வடிவிலேயே கூறப்பெறும்.

"முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத்தானே" (நன். 389)