|
தனியேவல் போன்றே பன்மடி யேவல்களும்
வினைமுதனிலையாக அமையும்.
எ-டு: வருவித்தான்,
போக்குவிப்பித்தான்
(4) உடன்பாட்டுவினை x எதிர்மறைவினை
வினை நிகழ்ச்சியை உள்ளதாகக்
குறிக்கும் வினை உடன் பாட்டு வினை; இல்லதாக
மறுக்கும் வினை எதிர்மறை வினை.
எ-டு: வா,
வந்தான், உண்டு-உடன்பாடு (Affirmative
or Positive verb)
வராதே, வந்திலன்,
இல்லை-எதிர்மறை (Negative
Verb)
(5) செயப்படுபொருள் குன்றிய வினை x
செயப்படுபொருள் குன்றாவினை
இவை முறையே செயப்படுபொருள்
கொள்வதும் கொள்ளா ததுமாம்.
எ-டு: நடக்கிறான்,
வருகிறான்-செ. பொ. குன்றியவினை (Intransitive
verb)
செய்கிறான்,
உண்பான்-செ. பொ. குன்றாவினை (Transitive
verb)
(6) தன்வினை x பிறவினை
ஒருவன் தானே செய்வது தன்வினை;
பிறனைக் கொண்டு செய்விக்கும் வினை பிறவினை.
எ-டு: வந்தான், கற்றான்-தன்வினை
வருவித்தான்,
கற்பித்தான்-பிறவினை (Causal
or Causative Verb)
வருவித்தான், கற்பிப்பித்தான்-பன்மடிப் பிறவினை
(7) செய்வினை x செயப்பாட்டுவினை
வினைமுதலே எழுவாயாய் நின்று ஒன்றைச்
செய்தலைக் குறிக்கும் வினை செய்வினை;
செயப்படுபொருள் எழுவாயாகி வினைமுதலால் தான்
ஏதேனும் செய்யப்படுதலைக் குறிக்கும் வினை
செயப்பாட்டுவினை.
எ-டு: நாய்
சோற்றைத் தின்கிறது-செய்வினை (Active
Voice)
சோறு நாயால்
தின்னப்படுகிறது செயப்பாட்டு வினை (Passive
Voice)
மறைமலையடிகள் இற்றைத்
தமிழைத் தூய்மைப்படுத்தினார்கள் - செய்வினை
|