|
4. ஏயிடைச்சொல்லொடு புணர்ந்த
ஏவல்வினை.
எ-டு: நில்லுமே-நின்மே,
வரட்டுமே.
5. ஓவிடைச்சொல்லொடு புணர்ந்த
ஏவல்வினை.
எ-டு:
மொழியுமோ-மொழிமோ.
6. தில்லிடைச்சொல்லோடு கூடிய
வியங்கோள்வினை.
எ-டு: வருகதில்.
இவற்றுட் பின் மூன்றுஞ்
செய்யுள் வழக்கென அறிக.
(17) அணியவினை
ஒன்றைச் செய்வதற்கு அணியமாய்
(ஆயத்தமாய்) இருக்கும் நிலையைக் குறிக்கும் வினை
அணிய வினையாம்.
இது இருவகையில் அமையும்.
1. அகரவீற்று
வினையெச்சத்தின் போ என்னும் துணைவினை.
எ-டு: சொல்லப் போனான்.
2. நாலாம் வேற்றுமைத்
தொழிற்பெயர் அல்லது அகர வீற்று
வினையெச்சத்தின் பின் இரு என்னும் துணைவினை.
எ-டு:
எழுதுவதற்கிருந்தான், எழுதவிருந்தான்.
(18) தொடர்ச்சிவினை
வினைத்தொடர்ச்சியைக் குறிக்கும்
வினை தொடர்ச்சி வினையாம். இது இருவகையில்
அமையும்.
1. இறந்தகால வினையெச்சத்தின்
பின் அல்லது நிகழ்கால வினையெச்சத்தின் ( Present
participle)
பின் வா என்னும் துணைவினை.
எ-டு: எழுதிவருகிறான்,
எழுதிக்கொண்டு வருகிறான்.
2. ஏயிடைச்சொல்லொடு புணர்ந்த
நிகழ்கால வினையெச் சத்தின் பின் போ
என்னும் துணைவினை.
எ-டு: படித்துக்கொண்டே
போகிறான்.
(19) ஆதல்வினை
ஒன்றைச் செய்வதற்கு ஆன நிலைமையை
உணர்த்தும் வினை ஆதல்வினையாம்.
எ-டு: வரலானான்,
எழுதலானேன்.
|