நாளடைவில்
தமில் என்று குறுகி வழங்குதல் இயல்பே. லகரத்தி
னின்றே ளகரமும் ளகரத்தினின்றே ழகரமும் தோன்றி
யிருத்தலால், லகரம் நேரடியாகவோ ளகர
வாயிலாகவோ ழகரமாய்த் திரிதலுண்டு.
எ-டு: மால்
- மழை, ஏலா - ஏழா (பழங்குடி மக்கள்
மனைவியை விளிக்கும்
சொல்), கல் - கள் - காள் -
காழ் (கருப்பு) நாலிகை
(மூங்கில்) - நாளம்
(உட்டுளை) - நாழி
(உட்டுளைப் படி)
ழகரம் லகரத்தின் மிகப்
பிந்தியதாதலின், தமில் என்னும் லகர வீற்று
வடிவம் அப் பெயரின் தொன்மையையும் உணர்த்தும்.
இனி, தன்மானம் தமர் என்னும்
சொற்களில், தன் தம் என்பன படர்க்கை சுட்டாது
சொந்த என்று பொருள்படுதல் போல், தமில் என்னும்
சொல்லிலும் தம் என்பது சொந்த என்று பொருள்
படுமாறு, தமிழரே அப் பெயரைத் தம் மொழிக்கு
இட்டுக்கொண் டனர் எனக் கொள்ளலும் ஒன்று.
சாயுங்காலம் என்பது சாயங்காலம் என்று
திரிந்தபின், சாயம் என்னும் பெயரெச்சமே
வடமொழியில் சாயுங் காலத்தைக் குறித்தல்
போல்; தமில் என்னும் பெயரடை
பெயர்த்தன்மைப்பட்டு மொழியைக் குறித்ததென்க.
வ.ஸாயம்-இ.ஸாம்.
இதுகாறுங் கூறியவற்றால், தமிழ்
என்னும் பெயருக்குக் கூறப்பட்ட
பொருட்கரணியங்கள் எல்லாவற்றுள்ளும், தனியாக
ழகரத்தையுடையது, தந்நாட்டு மொழி, என்னும் இரண்டே
பொருத்தமானவை யென்றும், இவற்றினும், சிறந்தது
தோன்றும் வரை இவையே கொள்ளத் தக்கன வென்றும்
எண்ணிக் கொள்க.
வடுகு கொடுந்தமிழ்நிலை கடந்து
மொழிநிலை யடைந்த பின், வடுகர்(தெலுங்கர்)
தமிழுக்கிட்ட பெயர் அருவம் என்பது. அது அரவம்
எனத் திரிந்தது. செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த
கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டெனத்
தொல்காப்பியர் காலத்திலேயே
கணக்கிடப்பட்டிருந்தன. பிற்காலத்தில்
செந்தமிழ் நிலப்பரப்பு மிகச் சுருங்கிவிட்ட
தனால், அதற்கேற்பக் கொடுந்தமிழ் நிலங்களும்
பண்டைச் செந்தமிழ் நிலத்திற்குள்ளேயே
அடங்கிவிட்டன. அந் நிலைமையையே,
"தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"
என்னு மிடைக்கால வெண்பாக் காட்டும்.
|