என்னும் ஒளவையார் பாட்டும், தஞ்சை
மாவட்டத்தைக் குறிக்கும் தமிழ்நாட்டுக்
களஞ்சியம் என்னும் இற்றைச் சொல்லும், இதைத்
தெளிவாய்க் காட்டும்.
சோறென்று சிறப்பாகச் சொல்வது
அரிசிச் சோற்றையே. அரிசி நெல்லின்
உள்ளீடாதலால், நெல் என்பதும் சிறுபான்மை
அரிசியைக் குறிக்கும். நெற்சோறு, நெற்பருக்கை,
நெற்கஞ்சி, நெற் பொரி முதலிய வழக்குகளைக்
காண்க. நெல்லிற்குச் சொல் என்றொரு பெயருண்டு.
அதனின்றே சோறு, சொன்றி என்னுஞ் சொற்கள்
பிறக்கும்.
ஒ. நோ:
நல்-நன்றி, பல்-பன்றி.
(தெல் - தென் - தென்பு - தெம்பு - தெளிவு)
தெல் - தெள் - தெறு - தேறு = தெளிவு.
தெறு - தெற்று - தெற்றென = தெளிவாக
சுல் - சுறு - சூறு. சுலவுதல் = சுற்றுதல்,
சுழலுதல்.
சூறுதல் = சூழ்தல். சுறு - சுற்று.
சோழநாடு நெல்லிற்கு அல்லது
சோற்றிற்குச் சிறந்ததினால், நெல்லைக்
குறிக்கும் சொல் என்னும் சொல்லினின்று அப்
பெயர் பெற்றிருக்கலாம்.
சொல் - (சோள்) - சோழம் - சோழன்.
ஒ.நோ: கல் - கள் - காள் - காழ் -
காழகம் = கருமை. கில் - கீழ்,
கெல் - கேழல். சுல் (வளை) - சூழ். துல்
(பொருந்து) - தோழம்- தோழன்.
புல் (துளை) - பூழை. பொல், பொள் - போழ்.
சோளப்பெயரினின்று
பிரித்துக்காட்டவும் சோழம் என்னும் வடிவு
வேண்டப் பெறும்.
சோழநாடு, முதற்காலத்தில் நெல்
மிகுதியாய் விளைக்கப் பட்டது மட்டுமன்றித்
தானாய் விளைந்த நிலமாகவும் இருந்திருக் கலாம்.
மாந்தரால் விளைக்கப்படும் பயிர்களெல்லாம்,
முன்பு தாமாய் விளைந்தவையே.
நிலைத்திணையால் (தாவரத்தால்) ஒரு
நாடு பெயர் பெறுவது இயல்பே. ஏழு தீவுகளுள்,
நாவலந்தீவு, இறலித்தீவு, இலவந்தீவு, குசைத்தீவு,
தேக்கந்தீவு என்னும் ஐந்தும் நிலைத்திணையாற்
பெயர் பெற்றவை. முழுகிப்போன குமரி கண்டத்திலும்
ஏழ்தெங்க நாடும், ஏழ்குறும்பனை நாடும் இருந்தமை
காண்க.
|