இயற்கையான
செலவெல்லாம் முன்னோக்கியதே யாதலின், தோன்
றலும் செலவும், முறையே, முன்வருகையும் முற்செலவு
மேயாகும். இவ் விருபொருட்கும் அடிப்படையான
முன்மைக் கருத்தை ஊகாரச் சுட்டே உணர்த்துகின்றது.
ஊகாரத்தை அல்லது உகரத்தை ஒலிக்கும்போது, இதழ்
குவிந்து முன்னிடத்தைச் சுட்டுவதை அல்லது
நோக்குவதைக் காண்க. சேம்பரார் ஆங்கிலச்
சொற்பிறப்பியல் அகர முதலியில்(Chamber‘s
Etymological Dictionery),
move என்னும் சொற்கு
மொழிப்பொருட்கரணியம் இதழ் முன்னோக்கிக்
குவிந் தொலித்தல் என்று குறித்திருத்திலைக்
கூர்ந்து நோக்குக.
முற்செல்லச்செல்ல, சேரவேண்டிய
இடத்திற்கு நெருக்கம் ஏற்படுகின்றது.
சேர்ந்தபின் பொருந்தல் நேர்கின்றது.
இடைவழியிற் சுவரும் கல்லும் மலையும்போலத் தடை
ஏற்படின், வளைய அல்லது பக்கமாகத் திரும்ப
நேர்கின்றது. தடுத்தபொருளையும் இடத்தையும்
துளைக்க முடியுமாயின், எலி சுவரையும் மாந்தன்
மலையையும் துளைத்தல் நேர்கின்றது.. துளைத்து
மறுபுறங் காணின் அதுவே துருவல். அதன்பின் தோன்றல்
முதலிய பழைய நிலைமைகளே மீண்டும் நிகழும்.
மண்ணில் வேர் இறங்குதலும், மரத்தில் ஆணி
பதிதலும், பொத்தகத்திற் புழுவரித்தலும் போன்ற
செயல்களாயின், வளைதலின்றியே துளைத்தலும்
துருவலும் நிகழும்.
இருதிணை யுயிரிகளின் வாழ்க்கையையும்
நோக்கினால், அவற்றின் செயல்களெல்லாம் இவ்
வெண்வகைக் கருத்து வட்டத்திற்குள்ளேயே
அமைகின்றன. இவற்றைக் கூர்ந்து கவனித்த பண்டைத்
தமிழர், தம் நுண்மாண் நுழைபுலத்தினால், இதுபோ
துள்ள தமிழ்ச் சொற்றொகுதியுள் ஏறத்தாழ
முக்காற்பங்கை ஊகாரச் சுட்டடியாகவே
தோற்றுவித்திருக்கின்றனர்.
உகரச்சுட்டு
உங்கு,
உதோள், }
= (பேசுகிறவனுக்கு)
முன்னிடத்தில்
உதோளி
உவ
உவ்விடம்
= " முன்னிடம்
உந்த = "
முன்னிடத்திலுள்ள
உவன் = "
முன்நிற்பவன்
உது = " முன்நிற்பது
உகரச்சுட்டுச்சொற்களெல்லாம்
படர்க்கைபோற் பயன் படுத்தப்படினும், பேசுவானுக்கு
முன்னிடத்தையும் அதிலுள்ள
|