எ-டு: நிலம்;
தண்ணீர்; செங்கால் நாரை, வடிம்பலம்ப நின்ற
பாண்டியன்.
கூட்டுச்சொல் வகைகள்
(1) இரட்டைக்கிளவி
எ-டு: கலகல,
விருவிரு
(2) இரட்டித்த சொல்
,, செக்கச் செவேர்,சின்னஞ்சிறு
(3) அடுக்குத் தொடர்
,, பலபல, திரும்பத்திரும்ப
(4) மீமிசைச் சொல்
,, கன்றுக்குட்டி, ஓங்கியுயர்ந்த,
(5) இருபெயரொட்டு
,, குமரிமலை, மக்கட்செல்வம்
(6) மிகவுச்சொல்
,, ஆண்மகன்,பெண் பெண்டாட்டி
(7) முரண்படுசொல்
,, பெண்மகன், பெட்டைப்பசன்கள்
(8) இணைமொழி
,, காய்கறி, வாழ்வுதாழ்வு
(9) அடைபெற்ற சொல்
,, நன்செய், தலைக்கழகம்
(10) கிளவியம்
,, ஆட்சிமாறி,
(எச்சத்தொடர்)
இந்தியொழியின்
(11) தொடரியம்
,, தமிழ் வாழும், தமிழன்
(முற்றுத்தொடர்)
உயர்வான்
அடுக்குத்தொடர் ஒற்றிடை மிக்கும்
திரிந்தும் தொக்கும் வரும்.
எ-டு: பலப்பல,
பற்பல, மென்மேலும், நந்நான்கு, வெவ்வேறு. சில
சொற்கள் தனிச்சொற்கும் கூட்டுச்சொற்கும்
பொதுவாயிருக்கும்.
ஒரு பொருள் தந்து ஒரு சொல்லாயும்
இருபொருள் தந்து இரு சொல்லாயும் இருப்பது
பொதுச்சொல்.
அளித்தேன் = தந்தேன் (ஒருசொல்),
வண்டுத்தேன் (இரு சொல்).
செய்வான் = புரிவான் (ஒருசொல்),
செயற்கை மழை (இரு சொல்).
தொடர்ச்சொல் வகைகள்
(1) அடுக்குக்கிளவி
எ-டு: குடுகுடுகுடு.
(2) மீமிசைச்சொல் ,,
முதுபழந்தொன்(மொழி).
|