திரிபு புணர்ச்சி
தோன்றல் (Insertion)
வாழை+காய் =
வாழைக்காய்
வரை+பந்தல் =
அவரைப்பந்தல்
களா+பழம் =
களாப்பழம்,களாம்பழம்
பூ+செடி = பூச்செடி (பூக்கும்
செடி)
பூ+செடி = பூஞ்செடி(அழகிய
செடி)
பணத்தை+கொடு =
பணத்தைக் கொடு
ஊருக்கு+போ =
ஊருக்குப்போ
வர+சொல் = வரச்சொல்
இ+நாள் = இந்நாள்
வெள்+ஆடு = வெள்ளாடு
நாடு+ஆண்மை =
நாட்டாண்மை
இவை
எழுத்துத் தோன்றல்.
செக்கார்+குடி =
செக்காரக்குடி
புளி+பழம் = புளியம்பழம்
கண்+பொத்தி =
கண்ணாம்பொத்தி
இவை சாரியைத்
தொன்றல்.
திரிதல் (Mutation)
நல்+செய் = நன்செய்
வெள்+கலம் = வெண்கலம்
செம்+தாமரை =
செந்தாமரை
வெம்+நீர் = வெந்நீர்
வேம்பு+இலை = வேப்பிலை
தண்+நீர் = தண்ணீர்
உள்+நாக்கு = உண்ணாக்கு
கல்+தாழை = கற்றாழை
நல்+நிலம் = நன்னிலம்
உள்+து = உண்டு, ஈன்+து =
ஈற்று
இவை திரிதல்.
கெடுதல் (Omission)
மரம்+வேர் = மரவேர்
தொல்காப்பியம்+நூல் =
தொல்காப்பிய நூல்
இவை கெடுதல்.
அன்று+கூலி = அற்றைக்கூலி
மண்+கட்டி =
மண்ணாங்கட்டி
இவை தோன்றலும்
திரிதலும்.
|