பக்கம் எண் :

கிளர்நிலைப் படலம்121

இந்தியை இலக்கிய முறையில் எதிர்த்தவரும், ஒப்புயர்வற்ற மறை மலையடிகள் ஆவர்.

மறைமலை யென்னும் மறையா மலையின்
நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும்
தமிழன் வடமொழியால் தாழ்வின்றி வாழ
இமிழுங் கடல்சூழ் இகம்.

(18) திருவரங்க நீலாம்பிகை அம்மையார்

தனித்தமிழ்த் தந்தையை அடியொற்றிப் பின்பற்றி, எளிய இனிய தூயநடையில் உரைநடை நூல்கள் எழுதியவரும், முதன் முதல் தனித்தமிழ்ச் சிற்றகரமுதல் தொகுத்தவரும், மறைமலை யடிகள் மூத்த மகளார் நீலாம்பிகையம்மையார் ஆவர்.

(19) திரு. வி. கலியாணசுந்தர முதலியார்

தமிழ்த்திருமணம் நடத்திவைத்தும், சமயத்துறையில் சமநிலை யுணர்ச்சியைப் பரப்பியும், காதல்மணத்தை ஊக்கியும், பெண் ணுரிமையைப் பேணியும், தொழிலாளரை முன்னேற்றியும், நாட்டிற் குத் தொண்டுசெய்தவர் திரு.வி.க.

(20) கா. சுப்பிரமணியப் பிள்ளை

திருநான்மறை விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகார முன்னுரை, தமிழிலக்கிய வரலாறு முதலிய அரிய ஆராய்ச்சி நூல்களியற்றித் தமிழுணர்ச்சியைப் பரப்பியவரும், இந்தியை எதிர்த்துத் தமிழைக் காத்தவரும், பேரா.கா.சுப்பிரமணியப் பிள்ளை யாவர்.

(21) சோமசுந்தரம் பிள்ளை

சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியச் சொல் லதிகாரக் குறிப்பை மறுத்து, சூறாவளிபோற் சுழற்றி யெறிந்தவர் மன்னர்குடிச் சோமசுந்தரம் பிள்ளையே.

(22) நாவலர் மு. வேங்கடசாமி நாட்டார்

மு. இராகவையங்காரின் வேளிர் வரலாற்றை ஆராய்ச்சியால் வீசியெறிந்தவர் நாவலர் மு.வேங்கடசாமி நாட்டாராவர்.

(23) வ. திருவரங்கம் பிள்ளை

மறைமலையடிகள் அச்சகத்திற்கும் நூல்வெளியீட்டிற்கும் பணந்தொகுத்துதவியும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை