பக்கம் எண் :

122தமிழ் வரலாறு

நிறுவியும், இந்தியை எதிர்த்தும், அருந்தமிழ்த் தொண்டாற்றியவர் திருவரங்கம் பிள்ளையாவர்.

(24) அண்ணாமலையரசர்

தமிழிசைக் கிளர்ச்சிசெய்து இசையரங்கைப் பெரும்பாலும் தமிழ் வண்ணமாக்கிய தனித்தொண்டு, அரசவயவர் அண்ணா மலைச் செட்டியாரதே.

(25) மு.கதிரேசச் செட்டியார்

அண்ணாமலையரசரின் தமிழிசைக் கிளர்ச்சிக்கு உறு துணையா யிருந்தவர், பண்டிதமணி கதிரேசச் செட்டியாராவர்.

(26) க. ப. மகிழ்நன்

தூய தமிழில் உரைநடைப் பாடப்பொத்தகங்களும் ஆராய்ச் சிக் கட்டுரைகளும் வரைந்தும், ஆங்கிலக் குறியீடுகளை அழகாக மொழி பெயர்த்தும், நற்றமிழ்த் தொண்டாற்றியவர் க.ப. மகிழ்நனார் (சந்தோஷம்) ஆவர்.

(27) சாமி வேலாயுதம் பிள்ளை

தமிழிற் கலைச்சொல்லாக்கத்தைத் தொடங்கிவைத்த இருவருள் ஒருவர், சாமிவேலாயுதம் பிள்ளையாவர்.

(28) இ. மு. சுப்பிரமணியப் பிள்ளை

தமிழிற் கலைச்சொல்லாக்கத்தைத் தொடங்கிவைத்த இரு வருள் ஒருவரும், சென்னை மாநில ஆட்சிச்சொல் அகரவரிசையைத் தொகுத்தவரும், கணியர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளையாவர்.

(29) துடிசைகிழார்

நெஞ்சத்துடிப்பெல்லாம் தமிழ்த் துடிப்பாக வுள்ளவரும், தொல் காப்பிய நூற்பாக்கட்குத் தக்க பாடவேறுபாடு கண்டவரும், உருத்திராக்க விளக்கம், சேரர் வரலாறு முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியரும், துடிசைகிழார் அ. சிதம்பரனார் ஆவர்.

(30) சோமசுந்தர பாரதி

இந்தியை வன்மையாய் எதிர்த்தவரும், எவருக்கும் அஞ்சாது தமிழைத் தாங்கியவரும், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆவர்.

(31) இராமச்சந்திர தீட்சிதர் (V.R.)

தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே யென்றும், தமிழரே மேலையாசிய நாடுகட்கும் நண்ணிலக் கடற்கரை நாடுகட்கும்