சென்று தமிழ
நாகரிகத்தைப் பரப்பின ரென்றும், உண்மையான
வரலாற்றைச் சீநிவாச ஐயங்காருக்குப்பின்
விரிவாக வெளியிட் டவர்,சென்னைப் பல்கலைக்கழக
வரலாற்றுத்துறைப் பேராசிரிய ராயிருந்த
இராமச்சந்திர தீட்சிதரே.
(32) பாரதிதாசன்
ஆரியத்தையும் இந்தியையும்
வன்மையாய் எதிர்த்தும், குடும்பவாழ்க்கையைச்
சீர்திருத்தியும், எளிய இனிய செந்தமிழ்ப்
பாடல்களால் தமிழ்ப் பாதுகாப்பிற்கும் தமிழர்
முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் புரட்சிப்
பாவலர் பாரதிதாசனார் ஆவர்.
(33) சேலம் இராமசாமிக் கவுண்டர்
எத்தனைய ரோதமிழர் இந்நாட்டிற் கல்லூரி
ஒத்த முதல்வரா யுற்றிருந்தும் - முத்தமிழ்ப்
பற்றா லெனையமர்த்ததிப் பண்பா டிராமசாமி
கற்றான் ஒருவனே காண்.
உயர்நிலைப் பள்ளிகளில் ஓவா துழந்தே
அயர்நிலை என்னை அழைத்தன் - றுயர்வளித்தான்
சேலங்கல் லூரிச் சிறந்த தமிழ்த்தலைமை
மேலன் இராமசா மி.
தொல்காப் பியமும் துணையாம் திருக்குறளும்
பல்காற் பயின்று பயன்கண்ட - ஒல்காப்
பெருந்தமிழ வாழ்வு பெயர்பெற வாழ்ந்தான்
விருந்திராம சாமி விழைந்து.
வீட்டிற்கும் தான்பிறந்த வெள்ளாண் குடியினுக்கும்
நாட்டிற்கும் செந்தமிழ் நல்லறிஞர்- கூட்டிற்கும்
சேலங்கல் லூரிக்கும் சீரார் இராமசாமி
சாலுங் கவுண்டனெனச் சாற்று.
மூவுலகும் ஆளும் முதல்வனே வந்திடினும்
பாவுலவும் பைந்தமிழ்ப் பண்டிதன் - மேவுவதை
இம்மியதும் தள்ளா இராமசா மிக்கவுண்டன்
செம்மனிதர் வேறியார் செப்பு.
இந்நூலும் ஏனை எழில்மொழி யாராய்ச்சி
நன்னூலும் நன்கிருந்து நான்செய்தேன் - எந்நாளும்
ஏராள ஓய்வும் இணங்கும் இராமசாமி
தாராளந் தந்ததினால் தான்.
|