பக்கம் எண் :

124தமிழ் வரலாறு

சேலங்கல் லூரி சிறந்திராம சாமியின்றேல்
ஞாலம் பரவுதமி ழாராய்ச்சி - நூலியற்றும்
தேவநேயன் எங்கே தென்மொழித் தொண்டெங்கே
பாவுதமிழ் மீட்பெங்கே பார்.

வள்ளுவன் மன்றமொன்று வைத்தும் உரைநடைநூல்
தெள்ளு தமிழ்வரைந்தும் சொற்பொழிந்தும் - ஒள்ளிய
ஆங்கிலச் சொற்பெயர்த்தும் ஆராய்ந் திராமசாமி
தாங்கினன் செந்தமிழைத் தான்.

வேலை யினிதியல வேண்டு முதவிசெய்து
மாலையுங் கூடி மகிழ்ந்துலவி - மேலுந்தான்
இன்னுரை யாடியெனக் கின்ப வுணவளித்தான்
மன்னே இராமசா மி.

இராமசா மிக்கவுண்டன் இன்புகழ் வாழி
பராவி கனகம்மை வாழி - விராவி
அவர்நன்னான் மக்களும் வாழி வழியும்
இவரின்னார் என்ன இனிது.

(34) ஆ. வரகுணபாண்டியன்

வீணை ஆரிய இசைக்கருவி யென்பார் வெட்கித் தலைகவிழுமாறு, செங்கோட்டியாழே வீணையொன்று, அதன் உறுப்புகளை யெல்லாம் தனித்தனியாக வண்ண ஓவிய வடிவிலும் வண்ணனை ஓவிய வடிவிலும் வரைந்துகாட்டி, வீணை தூய தமிழிசைக் கருவியென்று, மறுக்கொணாத கடைக்கழக நூற்சான்றுகளுடன், "பாணர் கைவழி" என்னும் நூலில் நாட்டியவர் ஆபிரகாம் பாண்டிதரின் மகனார் வரகுணபாண்டியனார் ஆவர்.

(35) இராமநாதன் செட்டியார்

தமிழிசைக் கிளர்ச்சிக்குத் துணையாயிருந்தவரும், தமிழைப் பாதுகாக்க இயன்றவரை தொண்டாற்றி வருபவரும், பேரா.லெ. பெ.கரு. இராமநாதன் செட்டியார் ஆவர்.

(36) குன்றக்குடி அடிகள்

அருள்நெறித் திருக்கூட்டம் அமைத்தும், இந்தியை எதிர்த்துத் தமிழைப் பாதுகாத்தும், தமிழ்நாடு முழுதும் இடைவிடாது சொற்பொழி வாற்றியும், தமிழரின் இருமை நலத்திற்கும் அருந்தொண்டாற்றி வருபவர் தவத்திருக் குன்றக்குடி அடிகளார் ஆவர்.